பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/470

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேர நாட்டுப் பிற இலக்கியங்கள் தமிழர்களுடைய பண்பாடும், இலக்கியமும் தொடக்க காலத்தில் களப்பிரர் மற்றும் பல்லவருடைய பண்பாடு, இலக்கியங்களோடும், பிற்காலத்தில் இசுலாமியர் மற்றும் கிறித்துவர்களுடைய பண்பாடு, இலக்கியங்களோடும் கட்டாயத் தொடர்பு கொள்ள வேண்டிய சூழ்நிலைக்கு ஆளாயின. இதன் விளைவாக, சங்க இலக்கிய உரைகளில் குறிப்பிடப்பட்டுள்ள சிறப்பு வாய்ந்த பல நூல்கள் பிற்காலத் தலைமுறையினருக் குக் கிடைக்கவில்லை. அவற்றுள், தகடுர்யாத்திரை, முத்தொள்ளாயிரம் என்னும் இரு நூல்களும் முழுமையாகக் கிடைக்க வில்லை. ஆனால், தற்பொழுது இருக்கின்ற இந்நூல்களின் சில பகுதிகளின் வாயிலாக அக்காலத் தமிழர்களின் வரலாற்றுச் சிறப்பு, இலக்கியச் சிறப்பு ஆகியவற்றை மதிப்பீடு செய்து போற்ற முடியும். இவ்வியலில் இந்த இரு நூல்களும் ஆய்விற்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. ம ற் .ெ ற ா ரு நூலான புறப்பொருள் வெண்பா மாலையும் ஆய்வுப் .ெ ப ா ரு ள ா க எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. புறப் பொருள் வெண்பாமாலை போரின் பல்வேறு நிலை களையும் போர் நடைபெறுகிறபொழுது மேற்கொள்ள வேண்டிய விதிமுறைகளையும் வரையறுத்துக் கூறு கின்றது. இத்தகு சிறப்பு வாய்ந்த இந்நூலின் ஆசிரியர் சேர நாட்டைச் சார்ந்தவர்.