பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/471

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1. தகடூர் யாத்திரை தமிழர் இழந்த இலக்கியச் செல்வங்கள் பல; கால வெள்ளத்திற்கும் கடல்கோளுக்கும் இரையான நூல்கள் பல. இறையனார் அகப்பொருளுரை கொண்டு இழந்த சில நூல்களின் பெயர்களையும் அறிகிறோம். தொல் காப்பியத்திற்கு உரையெழுதியுள்ள பே ரா சி ரி ய ர், நச்சினார்க்கினியர், தக்கயாகப்பரணி உரையாசிரியர் முதலிய உரையாசிரியர் கூற்றுக்களானும், புறத்திரட்டு என்னும் தொகை நூலானும் தகடூர் யாத்திரை' என்னும் பெயரிய நூல் ஒன்று இருந்தது என்பது தெரியவருகின்றது. ‘பாட்டிடை வைத்த குறிப்பி னானும் எனத் தொடங்கும் தொல்காப்பிய நூற்பாவிற்குப் பேராசிரியர் உரையெழுதுகின்றபொழுது தகடூர் யாத்திரை' என்னும் நூல் குறித்துப் பின்வருமாறு குறித்துள்ளார்: போட்டிடை வைத்த குறிப்பினானும் என்பது ஒரு பாட்டு இடையிடை கொண்டு நிற்குங் கருத்தினான் வருவன எனப்படும். என்னை? பாட்டு வருவது சிறு பான்மையாகலின், அவை தகடுர் யாத்திரை போல்வன.' நச்சினார்க்கினியர் தொன்மை தானே உரையொடு புணர்ந்த பழைமை மேற்றே" என்னும் தொல்காப்பிய நூற்பாவுரையில்,

தொன்மை என்பது உரைவிராய்ப் பழைமையவாகிய கதைப்பொருளாகச் செய்யப்படுவது என்றவாறு. அவை

1. தொல்: பொருள் : செய்யுளியல் : 171. 2. தொல்; பொருள் : செய்யுளியல் : 235.