பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/472

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

473 பெருந்தேவனாராற் பாடப்பட்ட பாரதமும், தகடுர் யாத்திரையும் போல்வன' என்றும், *தானை யானை குதிரை எனத் தொடங்கும் தொல் காப்பிய நூற்பாவின் உரையில், "இனி யானை நிலைக்குங் குதிரைநிலைக்குந் துறைப் பகுதியாய் வருவனவும் கொள்க. அஃது, அரசர்மேலும் படைத்தலைவர்மேலும் ஏனையோர் மேலும் யானை சேறலும், களிற்றின் மேலும் தேரின் மேலும் குதிரை சேறலும், தன்மேலிருந்துபட்டோர் உடலை மோந்து நிற்றலும் பிறவுமாம்...இவை தனித்து வாராது தொடர் நிலைச் செய்யுட்கண் வரும். அவை தகடுர் யாத்திரை யினும் பாரதத்தினுங் காண்க' என்றும் குறிப்பிட்டுள் -6IT Гг /г. தக்கயாகப்பரணி உரையாசிரியர் மதிதுரந்து வர வொழிந்த என்னும் தாழிசைக்கு உரையெழுதும்பொழுது 'இது தர்க்கவாதம். இது தமிழில் தகடூர் யாத்திரையிலும் உண்டு என்று குறிப்பிட்டுள்ளார். இக் குறிப்புகள் எல்லாம் தகடுர் யாத்திரை எனப் பெயரிய நூலொன்று இருந்தது என்பதனைத் தெரிவிக் கின்றன. புறத்திரட்டு என்னும் தொகைநூலில் :தகடுர் யாத்திரை' என்னும் நூலின் 44 செய்யுட்கள் தொகுக்கப் பட்டுள்ளன. எனவே புறத்திரட்டு தொகுக்கப்பட்ட காலத்திலேயே தகடுர் யாத்திரை நூல் முழுதும் கிடைக் காமல் 44 செய்யுட்களே கிடைத்தன என்ற உண்மையினை அறிகிறோம். தக்கயாகப் பரணி உரையாசிரியர் புறத் 3. தொல்; பொருள்: புறத்திணையியல் : 17 4. தக்கயாகப் பரணி, பேய்களைப் பாடியது; தாழிசை : 12.