பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/473

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

474 திரட்டில் தொகுக்கப்பெறாத ஒரு செய்யுளைத் தம் உரையில் மேற்கோள் காட்டியுள்ளார். தகடூர் யாத்திரை, தகடூர் என்னும் இடத்தில் நடந்த போர்ச் செய்திகளையெல்லாம் விளக்கமாகக் கூறுகின்றது. பெருஞ்சேரல் இரும்பொறை என்னும் சேரநாட்டரசன், தகடூரை ஆண்ட அதியமான் நெடுமான் அஞ்சியின்மீது பகைமை கொண்டு, தகடுர்மீது படையெடுத்துச் சென்று, அந்நகரை முற்றுகையிட்டுப் போர் செய்து வென்ற செய்தி யினை இந்நூல் உள்ளீடாகக் (Content) கொண்டுள்ளது. பதிற்றுப்பத்தின் எட்டாம் பத்து, அரிசில்கிழாரால் பெருஞ் சேரல் இரும்பொறை மீது பாடப்பெற்றதாகும். இச் சேரமன்னன் தகடுரைப் பொருது வென்ற காரணத்தால் தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை' என அழைக்கப்பட்டான். தற்போது தருமபுரி மாவட்டத்தின் தலைநகராக உள்ள தருமபுரியே அந்நாளைய தகடுர் என்பர் ஆராய்ச்சி அறிஞர். தகடூர் மன்னனாகிய அதியமான் நெடுமான் அஞ்சியும் பெருஞ்சேரலிரும்பொறையும் தமையன் தம்பி முறையினர் என்பது தகடூர் யாத்திரையின் 7 ஆம் பாட்டினால் விளங்கு கின்றது. பெருஞ்சேரலிரும்பொறை படையெடுத்து வந்து தகடூர்க் கோட்டையை முற்றுகையிடுகிற வரையிலும் அதியமான் நெடுமான் அஞ்சி, கோட்டைக்குள்ளேயே இருந்தான் என்ற் செய்தி நச்சினார்க்கினியர்தம் குறிப்பால் விளங்குகின்றது. மேலும் தகடுர்ப் போரில் முடியுடை மன்னர் மூவரும் அதியமான் நெடுமான் அஞ்சி அவன் மகன் தகடூர் பொருது வீழ்ந்த எழினி, திருக்கோவலூரைச் சுற்றியுள்ள மலை நாட்டினை ஆண்ட மலையமான் திருமுடிக்காரி ஆகிய குறுநில மன்னர்களும், பெரும் பாக்கன், நெடுங்கோளாதன் முதலாய பல வீரர்களும் இப் போரில் ஈடுபட்டார்கள் என்பது தெரிய வருகின்றது. அரிசில்கிழார், பொன்முடியார் முதலிய புலவர்கள் பாடியுள்ள செய்யுள்கள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன.