பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/474

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

475 இவர்கள் பாடியுள்ள பாடல்களால் இவர்கள் தகடுர்ப் போர் நிகழ்ந்த காலத்தில் வாழ்ந்தவர்கள் என்பது தெரிய வருகின்றது. மேலும் அரிசில்கிழார் பெருஞ்சேர லிரும்பொறைமீது பதிற்றுப்பத்து எட்டாம் பத்தினைப் பாடியுள்ளார் என்பது முன்னரே குறிப்பிடப்பட்டது. ஆயினும் தகடூர் யாத்திரை மிகப் பிற்காலத்து நூல் என்று. பேராசிரியர் எஸ். வையாபுரிப்பிள்ளை அவர்கள் கருது கிறார்". மக்களின் மனத்திற்கு உணர்ச்சியூட்டுகிற நிகழ்ச்சிகள், முக்கியமாக வீரச் செயல்கள், அவை நிகழ்ந்த அக்காலத்திலேயே பாட்டாகவும் கதையாகவும் இயற்றப் படுவது தொன்றுதொட்டு இன்று வரை நடைபெற்று வருகிற உலக வழக்கம். எனவே, தமிழகம் முழுவதும் உள்ள மக்களின் மனத்தைக் கவர்ந்ததும், உணர்ச்சியை பூட்டியதும் ஆகிய தகடுர்ப் போர்-இது முடியுடை வேந்தர் மூவரும், குறுநில மன்னர்களும் பங்குகொண்டு நிகழ்த்திய பெரும் போர் என்பதை மறத்தல் ஆகாது-அந். நிகழ்ச்சி நடந்த பல காலத்துக்குப் பிறகு, அது பழங்கதை யாகப் போன பிறகு, தகடூர் யாத்திரை என்னும் நாலாக எழுதப்பட்டது என்று கூறுவது, உலக இயற். கைக்கும் பழந்தமிழர் மரபுக்கும் பொருந்துவது அல்ல: என்று கூறி, திரு மயிலை சீனி. வேங்கடசாமி அவர்கள் பேராசிரியர் எஸ். வையாபுரிப்பிள்ளை அவர்களை மறுத் துள்ளார்.7 - தகடூர் யாத்திரை பத்தொன்பதாவது நூற்றாண்டு. வரை ஏட்டுச்சுவடியாக இருந்தது என்பதும், பின்னர் மறைந்து போனது என்பதும் டாக்டர் உ. வே. சாமிநா 5. தகடுர் யாத்திரை, செய்யுட்கள் : 9, 29, 47, 48. 6. புறத்திரட்டு; நூன்முகம், பக்கம் XIV 7. மறைந்துபோன தமிழ் நூல்கள் : பக். 161 & 163 (1959)