பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/475

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

476 தையர் அவர்கள் எழுதியுள்ள குறிப்பால் தெரிய வரு கின்றது. அக் குறிப்பு வருமாறு: அங்கே (திருநெல்வேலி தெற்குப் புதுத் தெருவில் இருந்த கிருஷ்ண வாத்தியார் வீடு) தொல்காப்பிய உரைச் சுவடி ஒ ன் றி ல், நாங்குனேரியிலிருக்கும் ஒருவருக்கு என்னிடமிருந்த தகடுர் யாத்திரைப் பிரதி ஒன்றைக் கொடுத்து விட்டு இப்பிரதியை இரவலாக வாங்கிக் கொண்டேன்’ என்று எழுதியிருந்தது. யாரிடமிருந்து வாங்கியது என்று குறிப்பிடவில்லை. தொல்காப்பிய உரையில் தகடுர் யாத்திரை என்று பெயர் வருகிறது. ஆதலால் அது பழைய நூலென்று உணர்ந்தேன்' "

பிற்காலத்தில் நாங்குனேரியில் நான்கு முறை ஏடு தேடியபோது தகடுர் யாத்திரை கிடைக்கவேயில்லை. பழைய நூல்கள் பல இந்த உலகத்தை விட்டு யாத்திரை செய்துவிட்டதைப் போல அந்த அருமையான நூலும் போய்விட்டதென்றுதான் நினைக்கிறேன். '

எனவே சங்க காலத்தில் எழுந்த ஒர் அரிய நூலினை நாம் இழந்து போனோம் என்பது தெளிவாகிறது. 8. என் சரித்திரம் பக், 876 & 877 (1950)