பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/476

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. முத்தொள்ளாயிரம் மூன்று வகையினதாகிய தொள்ளாயிரம் பாடல்களை உடைய நூல் என்றும், மூன்று தொள்ளாயிரம்-அதாவது 2700 பாடல்கள் உடைய நூல் என்றும், முத்தொள்ளாயிரம் பொருள்படுகின்றது. ஆயினும் புறத்திரட்டு என்னும் நூலில் 108 பாடல்களே முத்தொள்ளாயிரப் பாடல்கள் என்று சேர்க்கப்பெற்றுள்ளன. புறத்திரட்டில் சேர்க்கப் பெறாத முத்தொள்ளாயிரப் பாடல் ஒன்று இளம் பூரணர் உரையில் ஏற்றுார்தியானும் என்ற முதற் குறிப்பை உடையது காணப்படுகின்றது. இந்நூலின் பல பாடல்கள் பழைய உரைகாரர்களால் பல இடங்களிலும். எடுத்தாளப்பட்டுள்ளது. ஆனால் ஓரிடத்திலேனும் 2700 பாடல்கள் அடங்கிய பெரிய நூல் என்று முத்தொள்ளா யிரம் குறிப்பிடப்படவில்லை. முத்தொள்ளாயிரத்தினைப் பதிப்பித்துள்ள காலஞ்சென்ற ரசிகமணி டி. கே. சிதம்பர நாத முதலியார் அவர்கள் சேர, சோழ, பாண்டியர்கள் ஒவ்வொருவருக்கும் தொள்ளாயிரப் பாடல்கள் கொண். டது முத்தொள்ளாயிரம் என்று குறிப்பிட்டுள்ளார்." ஆயினும் இக்கருத்து ஏற்றுக்கொள்ளக் கூடியதாக இல்லை. ஏனெனில் தொள்ளாயிரம் என்ற தொகையை உடைய நூல்கள்- வச்சைத்தொள்ளாயிரம், அரும்பைத் தொள்ளாயிரம் முதலிய நூல்கள் தமிழில் இருந்தன என்பது இலக்கண விளக்கப்பாட்டியல் உரையில் பாட்டு: டைத்தலைவன் ஊரினையும் பெயரினையும் உவந்து, எண்ணாலே பத்து முதல் ஆயிரம் அளவும் பொருட்சிறப். 1. கலைக்களஞ்சியம்; தொகுதி 8 : பக்கம். 412. 2. நூற்பா; 88.