பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/477

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

478 பினாலே பாடுதல்-அவ்வவ்வெண்ணாற் பெயர் பெற்று நடக்கும் எண் செய்யுளாம். அவை முத்தொள்ளாயிரம், அரும்பைத் தொள்ளாயிரம் முதலியன எனக் காணப்படு கிறது. இங்கே எண்செய்யுளென்று வகைப்படுத்தப்பட்ட ஒரு நூலே உணர்த்தப்படுகிறது என்பதும், இதன் கண் வரும் செய்யுட்களின் பேரெல்லை ஆயிரத்துக்கும் மேற்படக் கூடாது என்பதும் அறியப்படுகின்றன. ஆகவே முத்தொள் வளாயிரத்தில் தொள்ளாயிரம் செய்யுட்களே உள்ளன என்பதும் சேர சோழ பாண்டியர்களுள் ஒவ்வொருவர் மீதும் முந்நூறு செய்யுட்களே இயற்றப்பட்டன என்பதும் அறியத்தக்கன' என்கிறார் பேராசிரியர் எஸ். வையாபுரிப் பிள்ளை அவர்கள். நரலின் சிறப்பு மன்னர்களது நாட்டுவளம், நகரவளம், கொடைவளம், வீரமேம்பாடு, வெற்றிச்சிறப்பு, காதற்சுவை முதலியன. நெஞ்சை அள்ளும் முறையில் முத்தொள்ளாயிரத்தில் அமைந்துள்ளன. ஒவ்வொரு பாட்டிற்குப் பின்னும் ஒரு நாடகக் களம் இருக்குமென்றும் மனத்தைவிட்டு அகலாத முறையில் களம், பாத்திரம், உணர்ச்சி, கவிவுருவம் எல்லாம் அமைந்திருக்குமென்றும், கவித்துவம் வாய்ந்த பாடல்கள் பலவும் தமிழன் ஒருவனுடைய ஆயுளுக்குப் போதுமென்று சொல்லத் தோன்றுமென்றும் திரு. டி. கே சிதம்பரநாத முதலியார்க் குறிப்பிட்டுள்ளார். நரலின் ஆசிரியர் இந்நூலாசிரியரின் பெயரும் வரலாறும் அறியக்கூட வில்லை. இருப்பினும் மன்னிய நாண்மீன் என்னும் 3. இலக்கிய தீபம்; பக்கம். 179. 4. கலைக்களஞ்சியம்; தொகுதி 8 : பக்கம். 4.12. 5. பாட்டு : 1.