பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/478

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

479 கடவுள் வாழ்த்துப் பாடலாலும், மடங்கா மயிலுார்தி " செங்கண் நெடி யான்மேல் என்னும் பாடல்களாலும் இவர் சமயம் சைவம் என்பது புலனாகின்றது. நரலின் காலம் பேராசிரியர் தொல்காப்பியச் செய்யுளியல் உரையில் முத்தொள்ளாயிரத்தை உதாரணம் காட்டியுள்ளார். இவர் காலம் 14 ஆம் நூற்றாண்டாகும். இளம்பூரணர் தொல்காப்பியப் புறத்திணையியலில் ஏற்றுார்தியானும்’ என்ற பாடலைக் குறிப்பிட்டு இப்பாடல் முத்தொள்ளா யிரத்து வந்தவாறு காண்க என்று குறிப்பிட்டுள்ளார். பேராசிரியர் தம் தொல் காப்பிய உரையில் முத்தொள் வளாயிரமும் பொய்கையார் முதலாயினார் செய்த அந்தாதிச் செய்யுளும்......... கலம்பகம் முதலாயினவும் புதிதாகத் தாம் வேண்டியவாற்றால் பல செய்யுளும் தொடர்ந்து வரும் விருந்து என்பதற்கு உதாரணமாம்" என விளக்கியுள்ளார். எனவே அந்தாதிச் செய்யுட்கள் கலம்பகம் முதலிய பிரபந்தங்கள் தோன்றிய 8, 9 ஆம் நூற்றாண்டுகளையொட்டி முத்தொள்ளாயிரமும் இயற்றப் பட்டிருக்க வேண்டுமென்பதனை ஒருவாறு ஊகிக்கலாம். மேலும் பேராசிரியர் பதினெண் கீழ்க்கணக்கினுள்ளும் முத்தொள்ளாயிரத்தும் ஆறடியின் ஏறாமல் செய்யுள் செய் தார் பிற்சான்றோரும் என்று முத்தொள்ளாயிர ஆசிரியரைப் பிற் சான்றோர் என்று குறிப்பிட்டுள்ளதனால் சங்ககாலத்திற்குப் பிற்பட்டது. இந்த நூல் என்பது தெளி வாகும். இதுகாறும் கூறியனவெல்லாம் புறச்சான்று mm= 6. பாட்டு : 2. 7. பாட்டு : 3. 8. நூற்பா; 239 உரை. 9. 5 ג ג உரை. 10. * † 229 உரை. 11. தொல்காப்பியம்; செய்யுளியல் : 158.

=