பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/479

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

480 களாகும். நூலின் அகத்தே காணப்படும் சான்றுகளை நோக்கின் சோழரின் தலைநகராக உறையூர் குறிப்பிடப் படுகிறதேயன்றி ஒரு பாடலிலேனும் தஞ்சைநகர் கூறப் படவேயில்லை. தஞ்சையை ஆண்ட குறுநில மன்னர்களை வென்று கி.பி. 850க்கு முன் விசயாலயன் என்னும் சோழ மன்னன் சோழப் பேரரசை நிறுவினான் என்பர் பேராசி. ரியர் திரு. நீலகண்ட சாஸ்திரியார். 12 முத்தொள்ளாயிரத்தில் முடியுடை மூவேந்தர்களான மூவேந்தர்கள் பெயர்கள் பொதுப்பெயர்களாகவே வந் துள்ளன. சான்றாக, பாண்டிய மன்னரைக் குறிக்குங்கால் தென்னன், பாண்டியன், பஞ்சவன், மாறன், வையையார் கோமான், கூடலார் கோமான், பொதியிற்கோமான், வழுதி, தமிழர் பெருமான் என்றும், சோழமன்னரைக் குறிக் குங்கால் சோழன், கோக்கிள்ளி, நலங்கிள்ளி, உறந்தை யார்கோ, புனனாடன், காவிரிநீர்நாடன், செம்பியன் என்றும், சேரவேந்தரைக் குறிக்குங்கால் சேரன், வானவன், கோதை, கோக்கோதை, மாந்தைக்கோன், முசிறியார் கோமான் என்றும் வந்துள்ளதனால் முத்தொள்ளாயிர ஆசிரியர் காலத்தில் வாழ்ந்த மன்னர் இன்னார் என்பது அறுதியிட்டு உரைக்க முடியவில்லை. இவர்களில் கோக் கோதை, நலங்கிள்ளி என்னும் பெயர்கள் சேர சோழ அரசர்களுடைய இயற்பெயர்களாகப் புறநானூறு குறிப் பிடினும் அவ்வரசர்கள் காலமும் முத்தொள்ளாயிர ஆசிரியர் காலமும் ஒன்றா என்பது ஆய்தற்குரியது என்பர் அறிஞர். 18 திவாகரம் என்னும் நிகண்டு நூலில் கணவட்டம்,14 பாடலம், கோரம் என்பன முறையே பாண்டியன் சேரன் 12. A History of south India, p. 166. 13. திரு. ந. சேதுரகுநாதன்; முத்தொள்ளாயிரம் முன்னுரை : பக்கம். 11. 14. திரு.எஸ்._வையாபுரிப் பிள்ளை; இலக்கிய தீபம் : ԼI . 183-188.