பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/480

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

481 சோழன் முதலிய அரசர்க்குரிய குதிரைகளின் பெயர் களாகக் குறிப்பிடப்பட்டுள்ளன. திவாகரத்தின் காலம் சுமார் பத்தாம் நூற்றாண்டு எனக் கொள்ளப்படுவதால் அக்காலத்திற்கு முன் இந்நூல் தோன்றியது எனக் கொள்ளலாம். எனவே முத்தொள்ளாயிரத்தின் காலம் சங்க இறுதிக்காலமான கி. பி. 150க்குப் பின்னும் விசயாலய சோழன் காலமான ஒன்பதாம் நூற்றாண்டுக்கு முன்னும் இருத்தல் வேண்டுமென்பது இதுகாறும் கூறியவற்றால் அறியப்படுவதாகும். 1. மேலும் பெரியாழ்வார் கையாண்டுள்ள சில தொடர் களும், பழமொழி நூலின்கண் உள்ள பழமொழிகள் சிலவும் முத்தொள்ளாயிரத்தில் காணப்படுகின்றன எ ன் று ம், ஆதலின் முத்தொள்ளாயிரம் கி. பி. ஒ ன் ப த ா ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தோன்றியது என்றும் பேராசிரியர் எஸ். வையாபுரிப் பிள்ளை அவர்கள் குறிப் பிடுவர். இனி நூலினுட் சென்று காண்போம்: ங் - சேரநாட்டு வளம் சேரநாடு நீர்வளம் நிறைந்த நாடு. சேறு நிறைந்த நீர்ப் பொய்கைகளிற் செவ்வாம்பற் பூக்கள் இதழ் விரிய அவற்றைக் கண்ட பறவையினங்கள் வெள்ளத்திலே தீப்பட்டதென்று அஞ்சித் தம் கையாகிய சிறகுகளாலே தம் இளம் பார்ப்புகளை ஒடுக்கிக் கொள்ளுகின்ற ஆரவாரம் சேரநாட்டில் உளது. இதனால் சேரநாட்டின் மருத வளமும், சேரநாட்டின் பகையற்ற அமைதிச் சூழலும் விளங்கலாகின்றன. புன்னை மரச் சோலையும் புனல் வளமும் தென்னஞ்சோலையும் மிகுதியாகச் சூழ்ந்திருக் ன்ெற மாந்தை நகர் சேரநாட்டில் உள்ளது. அச் சேர ਛੁਨ਼ சே. செ. இ-31