பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/482

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

483 மாக்கடுங்கோ , கோதை , பூழியர் கோ முதலான தொடர்களால் குறிப்பிடப்பெற்றுள்ளான். அரசர்களைப் பற்றி அறியப்படுவன அரசர்கள் தலையில் கண்ணிமாலையினையும் 28 மார்பில் ஒளிவிடும் பூண்களையும் தாரினையும்99 தோளில் தோள்வளையினையும் கையில் வைரக் கடகத் தினையும்’ அணிவர் என்பது பெறப்படுகின்றது. யானையின் வீரம் சேர நாட்டில் யானை மிகுதி. அவ்யானை பைங்கண் மால்யானை என்றும், போரிற் புகலுங் களியானை 83 என்றும் பாாாட்டப்பட்டுள்ளது. மேலும், சேரனுக்கு உரித்தாகிய சீற்றமுங் கொதிப்பும் மதமயக்கமும் உள்ள யானை, சிறப்பு மிக்க மன்னர்களுடைய விரிந்த முத்து மாலைகள் கட்டித் தொங்கவிட்ட வெண்கொற்றக் குடைகளைச் சிதறும்படியாகப் பிடுங்கி வீசியெறிந்த பழக்கத்தினாலே, விண் ணில் உலாவுந் திங்களுக்குங் குடைக்கும் வேற்றுமை தெரியாது, வானிலுள்ள திங்கள் மேலுந் தன் கையை நீட்டுகின்றது என்று யானையின் வீரம் விளங்கப் பேசப்பட்டுள்ளது.84 25. புறத்திரட்டு; 1570. 26. * > 1467, 1471, 1278, 1279, 1508, 1541, 1553, 1254, 1568. 27. புறத்திரட்டு; 1532. 28. 1508 ג פ. 29. 1431 ג כ. 30. 1279 כל. 31. 1431 ג כ. 32. 5 : 1278, 33. .1532 גג. 34. H. H. 1388.