பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/483

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

484. குதிரை, தேர் . குதிரையும் தேரும் ஒருசேரக் குறிப்பிடப்பட்டுள்ளன. 39 வலியத் தாவியோடுகின்ற குதிரை பூட்டப்பட்ட தேர் என்ற குறிப்பு நமக்குக் கிடைக்கின்றது. பேரூர்கள் பூஞ்சோலைகள் பூத்து விளங்கும் நகரம் வஞ்சி** யென்றும், முசிறிக்குத் தலைவன் சேரன் என்றும், புன்னை மரச்சோலையும் புனல் வளமும் தென்னஞ்சோலையும் மிகுதியாகச் சூழ்ந்திருக்கும் நீர்வளம் மிகுந்த நகரம் மாந்தை' என்றும் சேரநாட்டுப் பேரூர்கள் குறிக்கப் பெற்றுள்ளன. உவமைகள் முத்தொள்ளாயிரத்தில் சேரரைக் குறிப்பிடும் இருபது பாடல்களில் நான்கு பாடல்களில் ஐந்து உவமைகள் இடம்பெற்றுள்ளன. சேர மன்னன் கோதையின் படை வீரர்கள் வானத்தே விளங்கும் விண்மீன்களுக்கு ஒப்பிட்டுப் பேசப்பட்டுள்ளனர்." சேரமன்னன் கோதை அவ்விண் மீன்களுக்கு நடுவே அழகுற விளங்கும் சந்திரனுக்கு ஒப்பிட்டுப் பேசப்பட்டுள்ளான்.' சேரநாட்டின் சேறுள்ள நீர்ப்பொய்கைகளில் செவ் வாம்பற் பூக்கள் இதழ் விரிவன வெள்ளத்திலே தீப்பற்றி யெரிவதானதொரு காட்சியை நிகர்த்துள்ளது.* 35. புறத்திரட்டு; 1508. == 36. 5 * 862. 37. in 1279. 38. 12 1547, 1570. 39. in 5 829, 1467, 1532, 1553. 40. H. :) 1467. 41. * > 1467. 42. s. 829.