பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/484

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

485 தலைவி வாழும் ஊரினருடைய அருள் நெஞ்சத்தின் தன்மை நீரையும் நிழலையும் நிகர்த்தனவாயுள்ளது.* சேர மன்னன் உலாவரும் காட்சியினைக் காண எண்ணிக் கதவுப் பக்கத்திற்குச் சென்ற தலைவி நாணந் தடுக்கிடக் கதவடைத்தாள். இச்செயல் பெருஞ்செல்வர் வீட்டிற்குப் பொருள் கேட்கவிரும்பிச் சென்ற நாணமுள்ள வறிஞர் எவ்வாறு போவதும் வருவதுமே தொழிலாக அலைவார்களோ, அதுபோலத் தலைவியின் நெஞ்சும் கதவைத் திறந்து சேரன் உலாக் காட்சியினைக் காண நினைந்து போவதும், பின் நானந் தடுக்கக் கதவடைத்துத் திரும்புவதுமான செயலோடு ஒத்துள்ளது.' »-G5Is Gíð (metaphor) ஒரு பாடலில் கடலாகிய சேனை என்று. சேனை கடலாக உருவகஞ் செய்யப்பட்டுள்ளது. புறப்பொருள் செய்திகள் முத் தொள்ளாயிரத்தில் சேரரின் வீரம் சிறக்கப் பேசப்பட்டுள்ளது. சேரனுக்குக் கட்டவேண்டிய கப்பம் கட்டாமல் செருக்குக்கொண்டு பல மன்னர்கள் போர் செய்ய வந்தபோது சேரனுடைய படைத்தலைவன் அவர் களைப் பார்த்துப் பின்வருமாறு கூறுகிறான்.கே உங்களுடைய போர் யானைகள் பலவாயினும் பயனில்லை. கப்பத்தை உடனே கட்டிவிடுங்கள். உங்க ளுடைய கோட்டைக்கு உடனே ஒடி மதில்களின்மேல் சேரனுடைய வில்லை எழுதச் செய்துவிடுங்கள். வில்லைப் - 43. புறத்திரட்டு; 1532. 44. 1553 ג ת. 45. 1541 תב. . . 45(a) 5 1285 ל.