பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/485

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

486 பார்த்துச் சேரனுடைய படைகள் உங்களைத் தாக்காமல் போய்விடும். அதனால் பிழைத்துக் கொள்வீர்கள்.'" இதனால் சேரருடைய வென்றிச் சிறப்பு விளங்கு கின்றது. * சேர மன்னன் பகையரசர்மேல் வீசியெறிந்த வே லில் மிக்க புலால் நாற்றமும் கமழ்கிறது. பின்பு வெற்றிதந்த அந்த வேலுக்குச் சந்தனம் பூசி விழா எடுக்கப்படுகிறது. அவ்வேலின் பக்கத்தில் வண்டினங்கள் வந்து மொய்க் கின்றன. குறுநரிகளும் வேலின் பக்கத்தில் வந்து அவ் வேலைச் சூழ்ந்துகொண்டன. இதனால் சேரன் போரிட்ட போர்க்களத்தின் கொடுமையும் இறுதியில் வாகைசூடிய பெருமையும் ஒருங்கே விளங்குகின்றன. சேரனுக்குப் பகையாய் வந்து பொருது வீழ்ந்த மன்னர்கள் தம் கையில் வைரக் கடகம் கிடந்து விளங்கு கின்றன. தோள்வளைகளும் அழகாக அணிந்திருந்தார்கள். அவர்கள் ஊனை உண்ண வந்த சிறுநரிக் கூட்டம் வைரக் கடகக் கையையும் தோள்வளையையும் தசையுடனே கடித்திழுத்துத் தம் வாயைக் கிழித்துக்கொண்டு தம் தாய் நரியை நினைத்துத் துணைக்கு வரும்படிக் கூவுகின்றன. இதனால் போர்க்களத்தின் கொடுமை வருணிக்கப்படு கின்றது. 7 சேரனைப் பகைத்தவர் நாடுகள் அவனால் அழிக்கப் பட்டு வளமான நாடுகள் கருகித் தீய்ந்து முள்ளிச்செடிகள் பரவப்பெற்று நாளடைவில் அவையும் தீய்ந்துபோயின.49 மேலும் வேர்ப்படற்சியுள்ள அருகம் புல்லும், கைப்பறாக் காய் காய்க்கும் பேய்ச்சுரையும், தைத்திங்களில் மிகுதி யாக உண்டாகும் தைவேளைச் செடியும் எங்கும் நிறைந் 46. புறத்திரட்டு; 1471 47- .1431 ג. פ. 48. 1278 ג ת. -