பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/486

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

487. திருந்தன.49 இவ்வாறு பகைப்புலம் அழித்த சேரனின் வென்றிச்சிறப்பு குறிப்பிடப்படுகின்றது. அகப்பொருள் செய்திகள் ஒருதலைக் காதலைப் பேசும் கைக்கிளைச் செய்யுள் முத்தொள்ளாயிரத்தில் பல உள்ளன. பேராசிரியர் கைக்கிளைச் செய்யுள் முத்தொள்ளாயிரத்துப் பல வாயினும் எனக் கூறுவதால் சுட்டி ஒருவர் பெயர்கொண்ட பாடாண்டிணைப் புறப்புறக் கைக்கிளைச் செய்யுட்களை முத்தொள்ளாயிரத்தில் மிகுதியாகக் காணலாம். சேரர்க் குரிய கைக்கிளைப் பாடல்கள் முத்தொள்ளாயிரத்தில் பன்னிரண்டாகும். 51 உலாவரும் சேரனைக் காணவொட்டாமல் தாயர் வீதிக் கதவுகளை அடைத்தலாலும் மகளிர் திறத்த லாலும் அக்கதவுகள் தேய்கின்றன.' தாய், உலா வரும் தலைவனைத் தலைவி காண வொட்டாமல் கதவை அடைத்திட முடியும். ஆனால் சேர மன்னனோடு தொடர்புபடுத்தி அலர் துாற்றும் பெண் களின் வாயை அடக்க முடியுமோ என எடுத்து மொழி கின்றாள் இற்செறிக்கப்பட்ட தலைவி ஒருத்தி.ே உலாவரும் சேரமன்னனைக் காணும்பொருட்டுக் கதவுப் பக்கம் போன தலைவி நாணமுற்றுக் கதவை அடைத்தாள். தலைவனைக் காணவேண்டும் என்ற காதல் ஒரு பக்கம் 49. புறத்திரட்டு; 1279. 50. גיל 51. 5 : 1508, 1517, 1518, 1532, 1541, 1547, 1553, 1557, 1564, 1567, 1568, 1570. 52. H. :) 1568. 53. 5 * 1541.