பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/487

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

488. அவளை உந்தவும், பிறிதொரு பக்கம் பெண்களுக்கே இயல் பாக உரிய நாணம் தடைப்படுத்தவுமாகிய போராட்டம் அவள் நெஞ்சத்தில் நிகழ்வதனை அழகுற வடிக்கின்றார் புலவர். 54 | r உலாவரும் சேரமன்னனைக் காணச் சென்ற தலைவி யினது மனம் கொட்டும் பணி பெய்கின்ற மார்கழி மாதத்தில் புனிவாடை தாங்க முடியாமல் வலக்கையை இடத் தோளிலும், இடக்கையை வலத்தோளிலுமாக வைத்துப் பொத்திக் கொண்டு அந்தக் கைகளே போர்வையாக உதவ நடுநடுங்கி, கூனி வளைந்து பல்லோடு பல் பறை கொட்ட மெலிந்து அவனுடைய வாசலிலேயே நின்றுவிட்டது. * சேரன் உலாவரும்போது தலைவியின் -9յէՔ(5 நலத்தைக் கவர்ந்து செல்கின்ற காரணத்தால் தலைவியின் தாய் அவன் செங்கோல் வேந்தனல்லன் என்று மொழி கின்றாள். 6 r - சேரமன்னனைக் கண்ட தலைவியின் மாமை நிறம் அழிந்து பொன்னுாறினாற் போன்ற பசலை நிறம் வந்து விட்டது. மேலும் சேரன் பொருட்டுத் தலைவியின் நெஞ்சம் பெரிதும் கனலுகின்றது. அந்த வெப்பத்தைத் தாங்க முடியவில்லை. அது எங்கே தன்னைக் கொன்று விடுமோ என்று அலமருகிறாள் தலைவி. 8 சேரன் ஒருநாள் இரவு தலைவியின் கனவில் வந்து அவள் உடம்பைக் கையால் தடவினான். அதனைத் தோழியர் அறிந்து கொண்டனரோ எனத் தன் நெஞ்சோடு சொல்லி தலைவி வருந்துகிறாள். 59 54. புறத்திரட்டு; 1553. 55. ,, . . 1557. 56. , , , , 1517. 27. , , 1518. 58. - 5 1532. 59. 5 * 1547.