பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/488

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

489 தன் நலம் கவர்ந்த சேரனைக் கண்டால் கலகம் விளைவிக்கிறேன் எனச் சொல்லியிருந்த தலைவி அவனைக் கண்ட அளவில் அக்கலகத்தினை மறந்து மனம்மாறி நிற் கிறாள். தலைவியின் பெண்மை நலத்தையெல்லாம் கவர்ந்து கொண்ட கள்வன் எனப் பிறர் பழி துாற்றும் வண்ணம் சேரன் தலைவியின் நலத்தை வெளவுகிறான்." தலைவியின் உடல் மெலிவு கண்டு தாய் வேலனை யழைத்து வெறியாட்டெடுக்கத் தீர்மானிக்கிறாள். அது கண்ட தலைவி தன் நெஞ்சினை நிலைக்களமாகக் கொண்டு நிற்கின்ற காமநோய் அவனால்தான் நீங்குமேயன்றி வெறி யாட்டால் நீங்காது எனத் தோழியிடம் சொல்லு கின்றாள்.82 - தலைவி குறையைத் தானே அறியும் இயல்பினனாக இருப்பினும் தலைவன் தன் குறையை அறிந்திலனே, உயர்ந் தோரிடத்தில் பொருந்தியிருக்கின்ற இயல்பு இவ்வாறு இருக் கின்றதே என்று நெஞ்சம் வருந்துகின்றாள் தலைவி.* இவ்வாறு தலைவியின் கைக்கிளைக் குறிப்பு அழகுற முத்தொள்ளாயிரத்தில் வருணிக்கப்பட்டுள்ளது. இவ்வாறாக முத்தொள்ளாயிரம் கவிதைச் சிறப்பு கொண்டு துலங்குகின்றது. _ - == 60. புறத்திரட்டு; 1564. 61. 1567 תכ. 62. * 5 1568. 63. * > . 1570.