பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/489

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. புறப்பொருள் வெண்பாமாலை தமிழர்தம் வாழ்வு அகம், புறம் என்ற இரண்டனுள் அடங்கும். ஒத்த அன்பினராகிய தலைவனும் தலைவியும் தம்முட் கூடுகின்ற காலத்துப் பிறந்து, அக்கூட்டத்தின் பின்னர் அவ்விருவராலும் ஒருவருக்கொருவர் தத்தமக்குப் புலனாக இவ்வாறு இருந்ததெனக் கூறப்படாததாய், எப்பொழுதும் உள்ளத்துணர்வாலேயே அனுபவிக்கப்படும் இன்பம் அகம் எனப்படும். மேற்கூறிய ஒத்த அன்புடையார் தாமே அன்றி எல்லாராலும் அனுபவித்து உணரப்பட்டு இஃது இவ்வாறு இருந்ததெனப் பிறர்க்குக் கூறப்படுவதாய் அறனும் பொருளும் என்னும் இயல்பினை உடையதாய்ப் புறத்தே நிகழும் ஒழுக்கம் புறம் என்று கூறப்படும். புறப்பொருள் வெண்பாமாலை என்னும் இந்நூல் புறப் பொருளுக்கு இலக்கியமாகிய வெண்பாக்களின் வரிசை (மாலை)யை உடையதாகலின் புறப்பொருள் வெண்பா மாலை எனப் பெயர் பெற்றது. புறத்தின் இலக்கணமாகிய நூற்பாக்களையும் அவற்றின் இலக்கியமாகிய வெண்பாக் களையும், அவ்வெண்பாக்களின் கருத்தைத் தனித்தனியே புலப்படுத்தி ஒவ்வொன்றன் முன்னும் நிற்பனவாகிய கொளு (கருத்து)க்களையும் உடையது. கைக்கிளைப் படலத்தில் உள்ள இலக்கியச் செய்யுட்கள் மருட்பாக்களாக அமைந்துள்ளன. இந்நூல் வெண்பாமாலை என்றும் வழங்கப்படும். - இந்நூலாசிரியராகிய ஐயனாரிதனார் சேரர் பரம் பரையில் உதித்தவர் என்பதும், இதற்கு முதனூல் அகத்திய