பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/490

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

491 னாருடைய மாணாக்கர் பன்னிருவராலும் அருளிச் செய்யப் பட்ட பன்னிருபடலம் என்பதும் மன்னிய சிறப்பின் என்றும் இந்நூல் சிறப்புப் பாயிரத்தாலும், மெய்யி னார்.தமிழ் வெண்பா மாலையுள் ஐய னாரித னமர்ந்துரைத் தனவே என்னும் இந்நூலின் பதினெட்டாம் நூற்பாவாலும், "பன்னிரு படல முந்நூலாக வழிநூல் செய்த வெண்பா I О ГГоо) б1) ஐயனாரிதனாரும் இது கூறினார்' என்ற பேராசிரியர் உரையாலும் உணரப்படும். --- ஐயனாரிதனார் சேரர் மரபினர் என்று கருதப்பெறு கின்றார். ஐயனாரிதனார் என்பது திருவிடைக்கழியைச் சார்ந்த குராஞ்சேரியில் உள்ள சாஸ்தாவின் பெயர். இப்படியே சாஸ்தாவின் பெயராக இது பல இடத்தும் வழங்குகின்றது' என்பர் டாக்டர் உ. வே. சாமிநாத ஐயர்?. இவர் சோழ பாண்டியர்களைத் தம் நூலில் ஒப்பச் சிறப்பிக்கின்ற போக்கும், சைவரேனும் திருமாலைப் பற்றிச் சிறப்பித்துக் கூறுதலும் நடுநிலை சான்ற இவர்தம் நல்லுள்ளத்தினைப் புலப்படுத்துவனவாகும். இந்நூலில் உள்ள வெண்பாக்களில் பலவும், கொளுக்களில் சிலவும் இளம்பூரணர், ப. ரி ேம ல ழ க ர், நச்சினார்க்கினியர், அடியார்க்குநல்லார், புறநானூற்று உரையாசிரியர் முதலியவர்களால் மேற்கோளாக எடுத்துக்காட்டப்பட்டும் உரைநடையாக எழுதப்பட்டும் உள்ளன. பின்னாளில் இலக்கண விளக்க உரையாசிரியர் இந்நூலைப் பெரும் பாலும் எடுத்தாண்டிருக்கின்றார், பண்டைக் காலப் போர் முறையினையும் சமுதாய நிலையினையும் இந்நூல் புலப்படுத்துகின்றது. முதலாவதாகத் தொல்காப்பியப் 1. தொல்; மரபியல் : 94 உரை. 2. புறப்பொருள் வெண்பாமாலை; முகவுரை : ப. v & vi