பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/491

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

492 புறத்திணை இயல் கருத்துகளோடு இந்நூல் மாறு பட்டுள்ள இடங்களைக் காண்போம். வெட்சி, வஞ்சி, உழிஞை, தும்பை, வாகை, காஞ்சி, பாடாண் என்று ஏழு திணைகளாகவே தொல்காப்பியனார் வகைப்படுத்தியிருக்கப் புறப்பொருள் வெண்பா மாலை ஆசிரியர் வெட்சி, கரந்தை, வஞ்சி, காஞ்சி, நொச்சி, உழிஞை, தும்பை, வாகை, பாடாண், பொது இயல், கைக்கிளை, பெருந்திணை எனப்பன்னிரண்டாகப் பகுப்பர். தொல்காப்பியனார் வெட்சியில் கரந்தையை அடக்குவர். ஆயினும் தொல்காப்பியனார் கரந்தை என்ற ஒரு திணை உண்டு என்பதனை, ஆரமர் ஓட்டலும்" எனத் தொடங்கும் புறத்திணை இயல் நூற்பாவில் உடன் பட்டவராகின்றார். வஞ்சித் திணையைப் பொறுத்தவரை இருவரும் ஒரே கருத்துக் கொண்டுள்ளனர். மண் கருதிச் செய்யும் போரே வஞ்சித்திணையாகும். புறப்பொருள் வெண்பா மாலையில் கூறப்பட்டுள்ள குடைநிலை, வாள் நிலை, கொற்றவை நிலை முதலியன தொல்காப்பியத்துள் இல்லை. ஆனால் இவற்றைப் படை அரவத்தில் அடக்கி விட்டதாக நச்சினார்க்கினியர் கூறுவர். காஞ்சித்திணை தொல்காப்பியனார் கருத்துப்படி நிலையாமையைப் புலப் படுத்துவதாகும். ஆனால் வெண்பாமாலையார் கூற்றுப் படி வஞ்சி சூடி வந்த வேந்தனை எதிர்நின்று பொரத் துணியும் மன்னன் நிலையினைக் காஞ்சித்திணை காட்டு வதாகும். காஞ்சித்திணையைத் தொல்காப்பியனார் தனித் திணையாக வகுக்க, வெண்பா மாலை ஆசிரியர் வஞ்சிக்கு மறுதிணையாக ைவ த் து ள் ள ைம குறிப்பிடத்தகும். தும்பைத் திணையைப் பொறுத்தவரை இருவருக்கும் கருத்து வேறுபாடு இல்லை. வீரங்கருதி வெம்போர் == 3. தொல்: புறத்திணையியல் : 5.