பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/492

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

493 விளைக்க வந்த வேந்தனைக் களத்தில் நின்று பொருது: அழிக்கும் சிறப்பே தும்பை எனப்படும். தொல்காப்பியத். தும்பைத் திணையில் இல்லாத தும்பை அரவம், தேர் மறம், பாண் ப ா ட் டு, நூழிலாட்டு, முன்தேர்க்குரவை, பின்தேர்க்குரவை, பேய்க்குரவை, களிற்றுடனிலை, ஒள்வாணமலை, வெருவருநிலை, சிருங்கார நிலை, உவகைக் கலுழ்ச்சி முதலிய பன்னிரண்டு துறைகள் புறப்பொருள்வெண்பா மாலையுள் இடம் பெற்றுள்ளன. வாகைத்திணையைப் பொறுத்தவரையில் தி ைண ப் பொருளில் இருவர் கருத்தும் வேறுபடுகின்றன. தொல் காப்பியனார் வாகையை அரசர்க்கே அன்றி நான்கு வருணத்தார், அறிவர், தாபதர் முதலியோர்க்கும் உரிமை, ஆக்குவர். வெண்பா மாலை ஆசிரியர் அரசர்க்கு மட்டும் வாகை உரித்தென்று கூறினும் தொல்காப்பியனார் கருத்தை ஏற்றுக் கொண்டவர் என்பதனைப் பார்ப்பன வாகை, வாணிக வாகை, வேளாண் வாகை, பொருந. வாகை, அறிவன் வாகை, தாபதவாகை முதலிய துறை. களைக் கூறி இருப்பதினின்றும் தெரியலாம். இவ்வாறு சிற்சில இடங்களில் இவர் மாறுபடினும் பெரும்பாலும் தொல்காப்பியத்தினையே தழுவிக் கூறி உள்ளார் என்பதனைக் காண முடிகின்றது. இந்நூலின் முதல் நூல், பன்னிரு புலவரும் பாங்குறப் பகர்ந்த பன்னிரு படலமும் பழிப்பின்று உணர்ந்தோன்! என்று புலவரும் ஐயனாரிதனார் கூறப்படுதலால், புறப் பொருள் வெண்பாமாலை பன்னிரு படலத்தின் வழிநூல் என அறியலாம். பேராசிரியரும் இக்கருத்தே கொண் - 4. புறப்பொருள் வெண்பாமாலை; சிறப்புப் பாயிரம்.