பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/493

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

494 டுள்ளார். வெட்சித்திணை தன்னுறு தொழில், மன்னுறு. தொழில் என இருவகைப்படும் என்பது பன்னிரு படலத்து வெட்சிப்படல ஆசிரியர் கொள்கை. இக்கொள்கையினை ஐயனாரிதனார் உடன்பட்டுக் கூறியுள்ளார். எனவே இந் நூலினைப் பன்னிருபடலத்தின் வழிநூல் என்பர். நரலாசிரியர் காலம் இந்நூலில் உள்ள வெண்பாக்களுள் பலவும் கொளுக் களுள் சிலவும் இளம்பூரணர், நச்சினார்க்கினியர் முதலிய தொல்காப்பிய உரையாசிரியர்களாலும், அடியார்க்கு நல்லார், பரிமேலழகர் முதலிய இலக்கிய உரையாசிரியர் களாலும் மேற்கோளாக எடுத்துக் காட்டப்பட்டும், உரை நடையாக எழுதப்பட்டும் உள்ளன. ஆதலால் இந்நூலாசி ரியர் இவர்களுக்கு முற்பட்டவர் என்பது விளங்கும். யாப் பருங்கல விருத்தி உரையில் இந்நூல் மேற்கோளாகக் காட்டப்பட்டுள்ளது. அவ்வுரையின் காலம் 10ஆம் நூற் றாண்டு? எனக்கொள்ளப்படுவதால் இந்நூலாசிரியர் அதற்கும் முற்பட்டவர் என்பது மட்டும் தெளிவாகின்றது. இலக்கிய நயம் வெண்பாமாலை இலக்கண நூலே ஆயினும் இதன்கண் வந்துள்ள கொளுக்களும் வெண்பாக்களும் இலக்கிய நயம் சிறந்து விளங்குகின்றன. ஒரு சில காண்போம். வஞ்சிப் படலத்தில் கொற்றவள்ளையை விளக்கவந்த ஆசிரியர், மன்னவன் புகழ் கிளந்து ஒன்னார்நாடு அழிபிறங் கின்று” _ தொல்; மரபு : 94 உரை. தொல்; பொருள் : 60, இளம்பூரணர் உரை. சோம. இளவரசு, இலக்கண வரலாறு : ப. 87. . வஞ்சிப்படலம்; 8.