பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/494

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

495 என்று குறிப்பிட்டுள்ளார். அரசனின் பெருமையை முதற் கண் குறிப்பிட்டுப் பின்னர்ப் பகைவர் தேயம் கெடுவதற்கு வருந்திய வருத்தத்தினைக் குறிப்பிடுவதே கொற்றவள்ளை யாகும். இதன்கீழ் அமைந்துள்ள வெண்பா அவலச் சுவையை மிகுவித்துக் காட்டி இலக்கியச் சிறப்பை இனிதுறக் கொண்டுள்ளமையினைக் காணலாம். தாழார மார்பினான் தாமரைக்கண் சேந்தனவால் பாழாய்ப் பரிய விளிவது.கொல் - யாழாய்ப் புடைத்தேன் இமிர் கண்ணிப் பூங்கட் புதல்வர் நடைத்தேர் ஒலிகறங்கு நாடு. ஆராந்தாழ்ந்த மார்பினை உடைய மன்னனின் தாமரை மலர் போன்ற கண்கள் சிவந்தன. யாழை ஒப்ப முரன்று பக்கத்திலே வண்டுகள் ஆர்க்கும் மாலையினையும் பொலிவினையும் உடைய கண்ணினையும் உடைய மைந்தர் சிறுதேர் உருட்டும் ஒசை ஆரவாரிக்கும் நாடு, காண்பார் இரங்கும் வண்ணம் பாழாய்க் கெடும்போலும் என்று: மன்னனின் படையெடுப்புக்கு முந்தைய பகைவர் தேய நிலையினையும், படையெடுப்புக்குப் பின் அந்நாடு படப் போகும் துயரினையும் புலவர் ஒருங்கே குறிப்பிட்டார். அடுத்து நொச்சிப் படலத்தில் மகண்மறுத்து மொழிதல் என்னும் துறையைக் காண்போம். வெம்முரணான் மகள் வேண்ட அம்மதிலோன் மறுத்துரைத்தன்று." அதாவது வெய்தான பகையை உடைய பகையரசன் தன் மகளைத் திருமணம் செய்து கொள்ள வேண்ட, மதில் காத்துக் கோட்டை உள்ளிருக்கும் நொச்சியார் மறுத்துச் சொல்வது மகண் மறுத்து மொழிதல் எனப்படும். அது வருமாறு: 9. நெ ாச்சிப்படல ம்; 9.