பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/495

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

496 ஒள்வாண் மறவர் உருத்தெழுந்து உம்பர்நாட் கள்வார் நறுங்கோதை காரணமாக்-கொள்வான் மருங்கெண்ணி வந்தார் மழகளிற்றின் கோடிக் கருங்கண்ணி வெண்கட்டிற் கால். - நொச்சியில் ஒளிவிடும் வாள்வீரரைக் கோபித்து எழுந்து முன்னாள் தேன் ஒழுகும் நறுமாலையைப் பொருட்டாகக் கொண்டு கொள்வான் வேண்டி இடையின் அழகைக் கருதி வந்தவருடைய இளைய யானையின் கொம்பு இந்தக் கறுத்த கண்ணினை உடையாள் படுக்கும் வெளுத்த கட்டிலின் காலாகும் என்று நொச்சியார் வீரம் பேசினர். இது வீரத்தின் விளைந்த பெருமித உணர்வினைக் காட்டும். அடுத்து உழிஞைப் படலத்தில் வந்துள்ள ஒரு வெண்பா வீரர்தம் அஞ்சாத ஆண்மைப் பண்பினையும் வீரத்தின் பால் அவர்கள் கொண்டிருந்த அசையாத நம்பிக்கை யினையும் புலப்படுத்துவதாகும். அதிகாலையில் அரணின் கண் முரசொலிப்ப அது கேட்டுக் கண் சிவந்த உழிஞை. யார் அந்த அரனை அழித்து மாலைப் பொழுதிற்குள் அரணுக்குள் நுழைந்து அங்குதான் அடுத்த வேளை உணவு உண்போம் என்று தறுகண் மையோடு அவ்வரணுக் குள்ளே அகப்பையையும் துடுப்பினையும் எறிந்தார்கள் என்ற செய்தி பண்டைத் தமிழர்தம் மற மாண்பினை விளக்குவதாகும். o காலை முரச மதிலியம்பக் கண்கனன்று வேலை விறல்வெய்யோன் நோக்குதலும்-மாலை அடுகம் அடி சில் என் றம்மதிலுள் இட்டார் தொடுகழலார் மூழை துடுப்பு. 9 உவமை நயங்களும் வெண்பாக்களும் சிறக்க அமைந்து காணப்படுகின்றன. உழிஞையார் கோட்டை மதில்மேல். 10. உழிஞை; வெண்பா : 23.