பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/496

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

497. ஏணி சார்த்தி ஏறுகின்ற செயல் பாம்பும் உடும்பும் அழுந்தப் பற்றிக்கொண்டு நிற்கும் நிலையினை ஒத்துள்ளது என்று ஆ சி ரி ய ர் குறிப்பிட்டுள்ளார். பெண்களின் கண்கள் வேலின் வெம்மையோடும் கூர்மையோடும் ஒப்பிட்டுப் பேசப்படுவதோடு மகளிர் மயிலொடும் ஒப்பிட்டுப் பேசப்படுகின்றனர். அயிலன்ன கண்புதைத்தஞ்சி அலறி மயிலன்னார் மன்றம்படர. இது போன்று பல உவமைகள் நெஞ்சை அள்ளும் விதத்தில் வந்துள்ளன. சேரர் பற்றிய குறிப்புகள் பொதுவியற் படலத்தின் முதற்கண் சேரமன்னனின் பனம்பூ மாலையும் அவனுக்குரிமையான கொல்லிமலையும் பேசப்பட்டுள்ளன . இது போன்றே ேச ா ழ ரு க் கு அத்தியும் , பாண்டியர்க்கு வேம்பும் உரிய மாலை என்பது விளங்குகின்றன. மேலும் புறப்பொருள் வெண்பாமாலையுள் அமைந் துள்ள வெண்பாக்களில் பழந் தமிழகத்தின் போர் முறை களும் சமுதாய நிலையும், கொற்றவை, முருகன், திருமால், சிவன் முதலிய கடவுளர்களைப் பற்றிய குறிப்பும் வந்துள்ள மையைக் காணலாம். 11. உழிஞை; வெண்பா : 19. 12. வஞ்சி; 3 - 14. 13. பொதுவியற்படலம்; வெண்பா : 1. 14- 2 נג יג ת. 15. 13 3. சே. செ. இ-32