பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/499

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பக்தி இலக்கியம் பழந்தமிழர் வாழ்க்கையில் இயற்கையின் நெருங்கிய செல்வாக்கு மிக்கு இருந்ததைப் போலவே அவர்தம் வாழ்க்கையில் .ெ த ய் வ ங் க ளு ம் பிரிக்கவொண்ணாத் தொடர்பு கொண்டிருந்தன. கடவுள் என்பது ஒர் இன்றி யமையாத் தேவையாகவும், பழந்தமிழர் வாழ்ந்த நிலத்தின் தனித்தன்மையாகவும் விளங்கியது. சமயம் என்ற ஒன்று அக்காலத்தில் நிலவியதற்கான சான்று எதுவுமில்லை. கடவுளர் இருந்தனர்; ஆனால் நாம் இன்று கருதும் சமயம் தோன்றவில்லை. பழந்தமிழர் வழிபட்ட கடவுளர்கள் சிறந்த உயர்ந்த வாழ்க்கை நடத்தவும் மேம்பட்ட வாழ் க் ைக நிகழ்ச்சிக்கும் வழிகாட்டினர். மக்கள் கடவுளிடம் எதையும் வேண்டவில்லை. அவ்வாறே கடவுளுக்குக் காணிக்கை செலுத்த உறுதிமொழியும் எடுக்கவில்லை. எனினும் சேர அரசுகளின் ஆதரவின் கீழ் அந்தணப் புலவர்கள் வேள்வி நடத்தியதற்கான குறிப்புகள் உள்ளன. இவை தமிழ்ப் பண்பாட்டில் ஆரியம் முன்னரே புகுந்து விட்டதற்கான சான்றாகும். எனினும் இது தனித்த மெய்ப்பொருள் சமயமாக வடிவம் பெறவில்லை. சைனமும், பெளத்தமும் அன்பு, தியாகம், கொல் லாமை முதலியவற்றைப் பரப்பும் நோக்கில் தமிழகத் திற்குள் புகுந்து மக்களைக் கவர்ந்து காட்டுத் தீப் போல் பரவின. இவ்வுண்மைகளை மக்கள் நன்கு வரவேற்றுத் தங்கள் புலமைக்கு ஏற்ப, தக்க வகையில் மாற்றினர். இம் மெய்ப்பொருள்களை வலியுறுத்தும் இலக்கியங்கள் பெருகின. சேர நாட்டுக்காரரான சங்கராச்சாரியார் நாடு முழுவதும் பயணம் மேற்கொண்டு தன்னந்தனியாக