பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/5

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அணிந்துரை மாண்புமிகு செ. அரங்கநாயகம் தமிழகக் கல்வி அமைச்சர் பழந்தமிழகம் முடியுடை மூவேந்தரால் ஆளப் பெற்றமையைத் தொன்மை நூல்கள் எடுத்துரைக்கின்றன. கிறித்துநாதர் பிறப்பதற்குப் பன்னெடுங் காலத்திற்கு முன்னரேயே தமிழும், தமிழகமும் புகழ்பெற்று விளங்கியது. முத்தமிழ், மூவேந்தர் என்னும் அடைமொழிகளால் மொழியும், முடியுடை வேந்தரும் குறிக்கப்பெற்றனர். சேர, சோழ, பாண்டியநாடுகள் முத்தமிழுக்கும் அரிய பல வளங்களைத் தந்து போற்றின. வண்புகழ் மூவர் தண்பொழில் வரைப்பில் காலந்தோறும் பல்வேறு இலக்கியங்கள் தோன்றின. - சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள் என்னும் இவ் ஆய்வுநூல் சேரநாட்டுப் புலமையாளர்கள் பலரும் செந்தமிழுக்கு வழங்கிய நூல்களைப் பற்றி ஆராய்கின்றது. சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் மொழித்துறைத், தலைவர் பேராசிரியர் டாக்டர் சி. பாலசுப்பிரமணியன். அவர்கள் அரிதின் முயன்று இந்நூல்வழி, சேரர்தம். மொழி, நாடு, பண்பாடு, அரசியல் ஆகியன பற்றி ஆராய்ந், துள்ளார். பழந்தமிழ் நூல்களுள் ஒன்றான பதிற்றுப்பத்து, என்னும் நூல் முதலாகப் பக்தி இலக்கியங்கள் ஈறாகச், சேரநாட்டுச் செந்தமிழ்ப் புலமை நல்லோர் தமிழுக்களித்த இலக்கியங்கள் இந்நூலில் நன்கு ஆராயப் பெற்றுள்ளன.