பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/500

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

502 நின்று சைன, பெளத்தக் கொள்கையாளர்களிடையே சொற்போர் நிகழ்த்தி வெற்றி அடைந்தார். சைனத்திற்கும் பெளத்தத்திற்கும் மேம்பட்ட சமய மறுமலர்ச்சி முகிழ்த்தது. இம்மறுமலர்ச்சி சைவ நாயன் மார்கள், வைணவ ஆழ்வார்களின் தலைமையின் கீழ் ஓர் இயக்கமாக வடிவெடுத்தது. சைனர்களும் பெளத்தர் களும் தங்கள் நம்பிக்கைகளை நிலைநிறுத்த அளவை இயலைத் துணைக் கொண்டனர். ஆனால் சைவ வைணவ அடியார்கள் இதனை முறியடிக்கப் பக்தி இயக்கத்தைக் கருவியாகக் கொண்டனர். பிற சமயங்களுக்கு எதிராக இவ் இயக்கம் நாடெங்கும் ஆழ வேரூன்றிப் பரந்தது. அவர்கள் உள்ளத்தை உருக்கும் இனிய தெய்வத் திருப் பாடல்களை இசையோடு இணைத்துப் பாடினர். அவர்கள் உளமொன்றிய பாடல்கள் மக்களின் ஆன்மாவைத் தொட்டு இறைப்பேற்றில் நாட்டம் கொள்ளும் வகையில் அவ்வுள்ளங்களை உயர்த்தின. இவ்வடியார்கள் எளிய, தியாக வாழ்க்கையை நடத்தினார்கள். தெய்வத்தின்மீது இடையறாப் பக்தி செலுத்தினர். மக்களிடையே மக்களுக் காக வாழ்ந்தனர். புதிய ஆற்றல் மிகுந்த மெய்ப்பொருட் சமயம் வடிவெடுக்கத் தலைப்பட்டது. கடவுள், உயிர், உலகம் ஆகிய மூன்றும் தனிப்பெரும் கூறுகளாக வகுக்கப் பட்டு விளக்கப்பட்டன. h பக்தி இயக்கத்தைப் பரப்புவதில் ஈடுபட்ட அடியார் களுள் குறிப்பிடத்தக்கவர்களான குலசேகர ஆழ்வார், சுந்தரமூர்த்தி நாயனார், சேரமான் பெருமாள் நாயனார், வேணாட்டு அடிகள் ஆகியவர்கள் தமிழ் இலக்கியத்திற்கு அளித்த கொடை குறித்த மதிப்பீடு இங்குச் செய்யப்படு கின்றது. ஏனெனில் அவர்கள் ஒவ்வொருவரும் சேர் நாட்டுடன் குறிப்பிடத்தக்க தொடர்புள்ளவர்கள்.