பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/501

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பகுதி ! வைணவ இலக்கியம் குலசேகர ஆழ்வாரின் பெருமாள் திருமொழி தமிழகத்தே வழங்கும் சமயங்கள் பல; இந்நாட்டிலேயே கருக்கொண்டு தொன்று தொட்டு வழங்கிவரும் சமயங்கள் சிலவாகும். அவற்றில் சைவமும் வைணமும் தமிழகத்தின் மிகப் பழமை வாய்ந்த சமயங்களாகும். சமயம் என்றால் ஆறு, வழி என்பது பொருளாகும். சமைக்கப்பட்டது சமயம் என்பர். ஒருவன் இப்பிறப்பில் நன்னெறிக்கண் நின்று இறையருள் எய்தப் பெறத் துணை நிற்பன சமயங் களாகும். இனி, வைணவ சமயத்தின் பழமையினைச் சுருங்கக் காண்போம். வைணவ சமயத்தின் பழமை வைணவ சமயக் கடவுளான விஷ்ணு' என்ற சொல்லிற்கு எங்கும் +. வியாபித்துள்ளவன்' என்பது பொரு ளாகும். இருக்கு, யசுர், சாமம், அதர்வணம் ஆகிய நான்கு வேதங்களிலும் விஷ்ணு கூறப்படுகிறார். விஷ்ணு வேதங் களில் பரதேவதையாகவும், திருமூர்த்திகளில் ஒருவராகவும் குறிப்பிடப் பெறுகின்றார். மனித சமுதாயம் வாழ அவ்வப் போது பல அவதாரங்களை எடுத்தமையினை வைணவ நூல்கள் LJ Gl) எடுத்துரைக்கின்றன. எதுட்டர்களை அழிப்பதற்கும் துரயோரைக் காப்பதற்கும் நான் யுக ந் தோறும் அவதாரம் செய்கின்றேன்' என்று கீதையில்