பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/502

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

504 கண்ண பரமாத்மா மொழிந்துள்ளார். பாணினி சூத்திரப் பாடியத்தில் பதஞ்சலி முனிவர் திருமாலைப் பரதெய்வ மாகக் குறிப்பிட்டுள்ளார். வடநாட்டில் கோசண்டி என்ற ஓர் இடத்தில் கிடைத்த கல்வெட்டு கொண்டு கி.மு. 200-க்கு முன்னமேயே வாசுதேவனுக்குக் கோயில் கட்டி வழிபாடு செய்யும் வழக்கம் இருந்தமையினை அறிஞர் ஆர். ஜி. பந்தர்கார் தெளிவு படுத்தியுள்ளார்.2 தமிழ் நூல்களில் வைணவம் பழந்தமிழ் இலக்கண நூலான தொல்காப்பியத்தில் தமிழ்நாடு நானிலமாகப் பகுக்கப்பட்டுள்ள பான்மை யினைக் காணலாம். மலையும் மலையைச் சார்ந்த இடம் குறிஞ்சி என்றும், காடும் காட்டைச் சார்ந்த இடம் முல்லை என்றும், வயலும் வயலைச் சார்ந்த இடம் மருதம் என்றும், கடலும் கடலைச் சார்ந்த இடம் நெய்தல் என்றும் கூறப்பட்டன. இந் நானிலங்களுக்கும் தனித்தனியே கடவுளரைத் தொல்காப்பியனார் குறித்துள்ளார். அந் நூற்பா வருமாறு: ... -- * மாயோன் மேய காடுறை யுலகமும் சேயோன் மேய மைவரை யுலகமும் வேந்தன் மேய தீம்புன லுலகமும் வருணன் மேய பெருமண லுலகமும் முல்லை குறிஞ்சி மருத நெய்தலெனச் சொல்லிய முறையாற் சொல்லவும் படுமே. இந் நூற்பாவின் வழி நாம் முல்லைக்குத் தெய்வமாக அந்நாள் தொட்டே வழிபட்டுவந்த தெய்வம் திருமால் ārā - * * = : ... -- 1. பகவத் கீதை, பகுதி 4; சுலோகம் :8 2. Quarterly Journal of the Mythic Society, Bangalore Vol XI, p. 87. - 3. தொல்காப்பியம்; பொருளதிகாரம்; அகத்திணை இயல் : 5.