பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/503

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

505 என்பதனை அறியலாம். அகத்திணையியலிற் குறிப் பிட்டதனோ டமையாது தொல்காப்பியனார் புறத்திணை .யியலிலும் மாயோனைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார். 6 மாயோன் மேய மன்பெருஞ் சிறப்பிற் தாவா விழுப்புகழ் பூவை நிலையும். நச்சினார்க்கினியர் இப்பகுதிக்கு, மாயோனுடைய காத்தற் புகழை மன்னர்க் குவமையாகக் கூறும் பூவை நிலை என்று பொருள் கூறியுள்ளார். புறநானூற்றில் திருமால் எட்டுத் தொகை நூல்களில் பழமையான நூலாகக் கருதப்படும் புறநானூற்றில் பலராமனும் கண்ணனும் குறிக்கப்பெறுகின்றனர். வெள்ளை ேம னி யு ைட ய பலராமனுக்குக் கலப்பை ஆயுதமும் பனைக் கொடியும் குறிக்கப்பெறுகின்றன. கருநீலமேனியனான கண்ணனுக்குக் கருடக் கொடி கொடியாகக் குறிக்கப்பட்டுள்ளது. கடல்வளர் புரிவளை புரையு மேனி அடல் வெங் நாஞ்சிற் பனைக்கொடி யோனும் மண்ணுறு திருமணி புரையு மேனி விண்ணுயர் புட்கொடி விறல்வெய் யோனும். இராமாவதாரத்தைப் பற்றிய செய்திகள் தனுஷ்கோடித் துறையில் ஒர் ஆலமரத்தின் கீழ்த் தங்கி வானர சேனைகளோடு இலங்கைமேற் படையெடுப்பு குறித்து இராமன் ஆலோசனை செய்தபோது, ஆலமரத்தில் விற்றிருந்த பறவைகள் ஒலியெழுப்ப, தன் ஆலோசனை கெடாவண்ணம் தன் கைகளை மேலே உயர்த்திக்காட்டி 4. தொல்காப்பியம்; பொருளதிகாரம்; புறத்திணை யியல் : 60. 5. புறநானூறு, 56 : 3-6.