பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/504

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

506 அவை ஒலிசெத்து அடங்கப் பண்ணி ன செய்தி அகநானுாற்றில் அழகுறப் புனையப்பட்டுள்ளது: - வென்வேல் கவுரியர் தொன்முது கோடி முழங்கிரும் பெளவம் இரங்கும் முன்துறை வெல்போர் இராமன் அருமறைக் கவிந்த பல்வீழ் ஆலம் போல. புறநானுாற்றுப் பாடல் ஒன்றிலும் இராம சரிதை நிகழ்ச்சி இடம் பெற்றுள்ளது. இராவணனால் காட்டி லிருந்து கவர்ந்து செல்லப்பட்ட சீதை, தன் அணிகலன் களைக் கழற்றிப் பூமியில் எறிந்து சென்றதும், அதனைப் பின்னர்க் கண்ட குரங்குக் கூட்டங்கள் முறை மாற்றிப் புனைந்தபோது கூடியிருந்தோர் நகையொலியெழுப் பியதுமான செய்தி,

  • கடுங்தேர் இராமன் உடன்புணர் சீதையை

வலித்தகை அரக்கன் வெளவிய ஞான்றை நிலஞ்சேர் மதரணி கண்ட குரங்கின் செம்முகப் பெருங்கிளை நகையெழுந்தாங்கு. 7 என்னும் பகுதியால் அறியப்படும். - பரிபாடலில் ஆறு ப ா ட ல் க ள் மாயோனாம் திருமாலைப் பற்றியவையாகும். திருமாலிருஞ் சோலைத் திருமாலை இளம் பெரு வழுதியார் என்ற புலவர் பரிபாடலில் பின்வருமாறு வருணித்துள்ளார்:

  • புவ்வத் தாமரை புரையுங் கண்ணன்

வெளவற் காரிருள் மயங்குமணி மேனியன் எவ்வயி னுலகத்துங் தோன்றி யவ்வயின் மன்பது மறுக்கத் துன்பங் களை வோன் T T T S T T T S TS T S T T T T S TS T S S S S S S T T T S T T T S T T T S T S அகநானூறு, 70 : 13.10. புறநானுாறு; 378 : 18-21 பரிபாடல்; 1, 2, 3, 4, 13, 15.