பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/505

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

507 நலம்புரீஇ யஞ்சீர் நாம் வாய்மொழி இதுவென யுரைத்தென முள்ளமர்ந் திசைத்திறை இருங்குன்றத் தடியுறை யிவைகெனப் பெரும் பெய ரிருவரைப் பரவுதுந் தொழுதே." பத்துப்பாட்டுள் திருமால் கடியலூர் உருத்திரங்கண்ணனார் கச்சிம்பதியிற். கோயில் கொண்டுள்ள திருமாலை,

    • . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . நீடுகுலைக்

காந்தளஞ் சிலம்பிற் களிறுபடிங் தாங்குப் பாம்பணைப் பள்ளி யமர்ந்தோ னாங்கண்' என்று குறிப்பிட்டுள்ளார். முல்லைப் பாட்டில் திருமால், ஆக்ஞா சக்கரமும், வலம்புரிச் சங்கு தாங்கிய தடக்கைகளும் கொண்டவராகக் கூறப்பட்டுள்ளார்: ' நேமியொடு, வலம்புரி பொறித்த மாதாங்கு தடக்கை நீர்செல நிமிர்ந்த மால். மதுரைக் காஞ்சி கொண்டு திருமாலின் பிறந்த நாள் திருவோணம் என்ற செய்தியினை அறியலாம்:

  • கணங்கொள் அவுணர்க் கடந்த பொலந்தார்

மாயோன் மேய ஒண நன்னாள். திருமுருகன் புகழ் பாடும் திருமுருகாற்றுப்படையிலும் திருமாலைப் பற்றிய குறிப்புகள் உண்டு.

  • புள்ள ணி நீள்கொடிச் செல்வன்.'

9. பரிபாடல்; 15. 10. பெரும்பாணாற்றுப்படை, 371-374, 11. முல்லைப் பாட்டு; 1-3. 12. மதுரைக் காஞ்சி, 590.591. 13. திருமுருகாற்றுப்படை 151. -- -