பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/507

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

509 அடுத்து, வேங்கடமலையில் எழுந்தருளியிருக்கும் திருமாலின் நின்ற கோலத்தைப் பின்வருமாறு பாங்கும் வருணிக்கின்றான்: " வீங்கு நீரருவி வேங்கட மென்னும் ஓங்குயர் மலையத் துச்சி மீமிசை விரிகதிர் ஞாயிறு திங்களும் விளங்கி இருமருங் கோங்கிய இடைநிலைத் தானத்து மின்னுக் கோடியுடுத்து விளங்குவிற் பூண்டு கன்னிற மேகம் கின்றது போலப் பகையணங் காழியும் பால்வெண் சங்கமுங் தகைபெறு தாமரைக் கையி னேந்தி நலங்கிளர் ஆரம் மார்பிற் பூண்டு பொலம்பூ வாடையிற் பொலிந்து தோன்றிய செங்கண் நெடியோன் நின்ற வண்ணமும்.' மேலும் ஆய்ச்சியர் குரவை முழுதும் இசைப்பாடலால் நிகழ்த்தப் பெறும் திருமால் வணக்கமும் வழிபாடும் என்றே. கொள்ளத்தகும். -

  • மூவலகும் ஈரடியால் முறைகிரம்பா வகைமுடியத்

தாவியசே வடிசேப்பத் தம்பியொடும் கான்போந்து சோவரணும் போர்மடியத் தொல்லிலங்கை கட்டழித்த சேவகன் சீர்கேளாத செயியென்ன செவியே திருமால் சீர்கேளாத செவியென்ன செவியே என்ற இப் பாடல் இராமாவதாரச் சிறப்பினை நுவல்வ. தாகும். மணிமேகலை கூறுவது மணிமேகலை சமயக் கணக்கர் தந்திறங் கேட்ட காதையுள் வைணவ வாதம் கூறப்பட்டுள்ளது. 18. சிலப்பதிகாரம்; காடுகாண் காதை : 41-51. 19. சிலப்பதிகாரம்; ஆய்ச்சியர் குரவை, படர்க்கைப் பரவல் : 35.