பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/508

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

510

காதல் கொண்டு கடல்வணன் புராண

மோதினன் நாரணன் காப்பென் றுரைத்தனன்.'" என்ற பகுதிகொண்டு விஷ்ணு புராணம் போன்ற திருமாலைப் பற்றிய புராணங்கள் மணிமேகலைக் காப்பியம் எழுந்த காலத்திற்கும் முன்னரே பெருவழக்குப் -- பெற்றிருந்த செய்தி தெரியலாகும். ‘. . . . திருமால் எல்லாப் பொருள்களிலும் ஊடுருவி நிற்கும் தன்மையினை வடமொழியில் அந்தர் யாமி' என்பர். பரிபாடலில் திருமாலின் இத்தகு தன்மை நெருப்பினுள் வெப்பமாய், பூவினில் நறுமணமாய், கல்லினுள் மணியாய், சொல்லினுள் வாய்மையாய், அறத்தினுள் அன்பாய், மறத் தினுள் வலிமையாய், அனைத்துமாய், அனைத்தின் உட் பொருளுமாய்த் திருமால் விளங்குகின்ற உண்மையினைப் பரிபாடல் பின்வருமாறு குறிப்பிடுகின்றது. ' தீயினுட் தெறல்நீ பூவினுள் நாற்றம்ே கல்லினுள் மணியும்நீ சொல்லினுள் வாய்மைே அறத்தினுள் அன்பு மறத்தினுள் மைந்துே அனைத்தும்ே அனைத்தினுட் பொருளும்." இதுகாறும் கூறியவற்றால் வைணவ சமயத்தின் பழமை ஒருவாறு அறியப்படும். ஆழ்வார் என்னும் சொல் வைணவ சம்பிரதாயத்தனபடி அச சமயப ம.பாடியாா, களை ஆழ்வார்கள், ஆசாரியர்கள் என இருவகையாகப் பகுப்பர். இவர்களுள் ஆழ்வார்கள் எனப்படுவோர் அவதார புருஷர்களாகவும், ஞான பரிபூரணர்களாகவும், 20. மணிமேகலை, சமயக் கணக்கர் தந்திறங் கேட்ட காதை: 98.99. . 21. பரிபாடல்;3 : 63-68,