பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/509

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

511. வைணவ சமயத்தின் முதல்வர்களாகவும் விளங்கினவர்கள் ஆவர். ஆழ்வார் என்பதற்குப் பகவத் குணங்களில் ஆழ்ந்து ஈடுபடுவோர்’ என்று பொதுவாகக் கூறுவர். பண்டைச் சாசனங்களிலும் நூல்களிலும் : ஆழ்வார் என்ற சொல் பயின்று வழங்கக் காணலாம்.82 * * ஆசாரியர் என்னும் சொல் ஆழ்வார்களின் அருளிச் செயலின் வழியைப் பின்பற்றி பூரீ வைஷ்ணவ தரிசனத்தைப் பிரவசனஞ் செய்து நாட்டை உய்யக் கொண்ட பெரியோர்களை ஆசாரியர் என வழங்குவர். ஆசாரியர்கட்கெல்லாந் தலைவர், பூரீமந் நாதமுனிகள் என்பர். - * - F குலசேகரர் ஆழ்வார்கள் பன்னிருவரில் இவர் ஒருவர் ஆவர். ஆழ்வார்களில் திருமங்கையாழ்வாரும் இவரும் அரசர்களாக ஆண்டவர்கள் ஆவர். அதிலும் திருமங்கை மன்னர் குறும் பொறை நாட்டையாண்டவராயிருக்கக் குலசேகரர். பழந் தமிழ் நாடுகளாம் சேர சோழ பாண்டிய நாட்டில் மூன்றில் ஒன்றான சேர நாட்டில் செங்கோல் செலுத்தியவர் ஆவர். இவர் தம்முடைய பாடல்களில் தம்மை கூடித்திரிய வருணத்தைச் சார்ந்தவர்” எனவும், கொங்குநாட்டின், அரசர்?’ எனவும், கொல்லி என்னும் தலைநகரையுடைய. 22. ஆழ்வார் திருவரங்க தேவர்க்கு.' - — S. I. I. III p. 150. : இனிப் பிறக்கக்கடவ மயித்திரி யாழ்வாரான புத்த தேவர்க்கு." -- " - + -- ~ * - - தக்கயாகப் : 193 உரை. 23. ' எங்கள் குலத் தின்னமுதே பிராதவனே I == * = தாலேலோ. --பெருமாள் திருமொழி,8:3 24. கொங்கர்கோன் குலசேகரன்." .9 :3 כי