பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/511

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

513 பெருமாள் என்றே வழங்கப்பெற்றார் என்றும் கூறுப.' வேறு சிலர் இவ் ஆழ்வார் கூடல் நாயகன், கோழிக்கோன்' என்று கூறுகின்றவை, பாண்டிய சோழநாட்டாட்சியில் தமக்குரிய தலைமை பற்றியன என்பதினும், அவ்விருவர் மரபுடனும் தங்குலத்தவர்க்கிருந்த தொடர்பு பற்றியன என்று கொள்ளுதலே பெரிதும் பொருத்தமுடைத்து என்பர். 2 ஆழ்வாரின் காலம் திருமங்கையாழ்வார்

  • பரனே பஞ்சவன் பூழியன் சோழன்

பார்மன்னர்மன்னர் தாம்பனிங் தேத்தும்வரனே' என்று, தம் காலத்தேயிருந்த மன்னர்கள் திருமாலடியாராக இருந்த செய்தியைக் குறித்திருக்கின்றார். திவ்ய சூரி சரிதம் திருமங்கை மன்னன், தொண்டரடிப் பொடிகள், குலசேகரப்பெருமாள் ஆகிய மூவரும் சம காலத்தவர்களே எனக் குறிப்பிட்டிருப்பதை நோக்க, திருமங்கையாழ்வார் காலத்திற்கு அணித்தான காலத்திற்றான் குலசேகரரும் வாழ்ந்திருத்தல் வேண்டும் எனலாம். மேலும் குலசேகரர் தம் பெருமாள் திருமொழியில், ஆடிப் பாடி யரங்க வோவென் றழைக்குங் தொண்டரடிப் பொடி ஆட நாம்பெறிற் கங்கை நீர்குடைங் தாடும் வேட்கையென் னாவதே. : i. என்ற அடிகளிலே, தொண்டரடிப் பொடி என்ற தொடரை ஆண்டுள்ளார். இதனினின்று தொண்டரடிப் பொடியாழ் 3 I. ಫಿ'ಸಿ M. Srini vasa Aiyangar’s Tamil Studies P. 310. 32. திரு. மு. இராகவையங்கார்; ஆழ்வார்கள் கால நிலை: ப. 172. 33. பெரிய திருமொழி: 7: 4: 1-3. 34. பெருமாள் திருமொழி; 2: 2. சே. செ. இ.33