பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/512

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

514 வாரைத் தம் திருவுள்ளத்துக் கொண்டு இத்தொடரைக் குலசேகரர் வழங்கியிருப்பாரோ என ஒர் -எண்ணம் எழு கின்றது. மேலும், சுந்தரர் காலத்தவரும், ஆதியுலா, பொன் வண்ணத் தந்தாதி, திருவாரூர் மும்மணிக் கோவை முதலியவற்றின் ஆசிரியரும், சிறந்த சிவனடியாருமான சேரமான் பெருமாளுக்கு முன்னர் ஆண்ட கேரள வேந்தன் தன்னரசு துறந்து தவசியானான் என்பதனைச் சேக்கிழார் பெருமான் பின்வருமாறு குறிப்பிட்டிருக்கக் காணலாம்:

  • நீரின் மலிந்த கடலகழி

நெடுமால் வரையிற் கொடிமதில் சூழ் சீரின் மலிந்த திருநகர மத னிற் செங்கோற் பொறைய னெனும் காரின் மலிந்த கொடை கிழன் மேற் கவிக்குங் கொற்றக் குடைநிழற்கீழ்த் தாரின் மலிந்த புயத்தரசன் தரணி நீத்துத் தவஞ்சார்ந்தான். . இப்பாடலில் தரணி நீத்துத் தவஞ் சார்ந்தவராகக் கூறப்பட்ட சேரவேந்தர், 7, 8 ஆம் நூற்றாண்டினரான திருமங்கை மன்னனுக்குச் சம காலத்தவராகவும் தம் மரசு துறந்தவராகவும் அறியப்படும் குலசேகரப் பெருமாள் என்றே ஆராய்ச்சியாளர் கருதுவர்.98 மு. இராக வையங்கார் இவர் 8 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்தவர் என்பர். பெருமாள் திருமொழியின் 2, 3 ஆம் திருப்பதிகங்களில், 35. பெரியபுராணம்: சேரமான் பெருமாள் நாயனார் புராணம்: 10. 36. திரு. மு. இராகவையங்கார்: ஆழ்வார்கள் கால நிலை: ப. 161.