பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/514

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

516 I of தீர்த்தம் பிரஸ்ாதித்தருளின அன்றிரா, திருப்புன்னைக் கீழ் (பூரீ ரங்கநாதப் பெருமாள்) எழுந்தருளியிருந்து தேட்டருந்திறல் கேட்டருளும் போது ' * என்று கூறப்பட்டுள்ளது.' தேட்டருந்திறல் என்பது, இத்திருப்பதிகம் முழுது மாகும். இதனால் குலசேகரர் இப்பிரபந்தம் புகழ் பெற்றுப் பாடப் பெற்ற 11ஆம் நூற்றாண்டிற்கும் முன்னமே வாழ்ந் தவர் என்பது பெறப்படும். அறிஞர் தெ. பொ. மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்கள் குலசேகரர் என்னும் தம் நூலில் பின்வருமாறு குலசேகரர் காலத்தைப் பற்றி எழுதியுள்ளார்: 'முதலாழ்வார்களது காலத்தைப் பற்றிக் கருத்து வேற்றுமை இருந்தாலும், குலசேகரர் அவர்களுக்குப்பின் வந்தவர் என்பதில் ஐயம் இல்லை. ஆதலின், இவர் பல்லவர் காலத்தவர் எனலாம். ஒன்பதாம் நூற்றாண்டில் எழுதப்பெற்ற ஒரு கல்வெட்டு தேட்டருந் திறல் தேனினை' என வரும் இவரது திருமொழியைத் திருக்கோயிலில் பாடுவதற்காகக் கட்டளை ஏற்படுத்துகின்றது. இவை நடப்பதற்குச் சில காலம் முன்னதாக, இவர் வாழ்ந் திருத்தல் வேண்டும். எவ்வாறாயினும், எட்டாம் நூற்றாண்டின் ஈற்றில் வந்தவர் என்று கூறுவதோடு இந்த ஆராய்ச்சியை முடித்துக் கொள்ளலாம்.' பிறந்த ஊர் இவ் ஆழ்வார் அவதரித்த நகரம் மேலைக் கடற் கரையிலுள்ள குக்குட கூடலாம்" (கோழிக் கூடு) என்று திவ்யசூரி சரிதமும், கொல்லி நகர் என்று பின்பழகிய 41. S. I. I. Vol III. P. 150. 42. குலசேகரர் : ப. 10.