பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/515

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

517 பெருமாள் சீயர் குருபரம்பரையும், வஞ்சிக் களம் என்று வேறு பெரியார் பாடல்களுங்43 குறிப்பிடுகின்றன. பெருமாள் எனும் பெயர் கேரளோத்பத்தி எனும் நூல் சேரநாட்டைப் பற்றி வழங்கிவரும் கதையைக் கூறும் நூலாகும். சேரநாடு முதன் முதலில் நான்கு பிரிவாகப் பிரிந்து நான்கு கழகத் தினரின் ஆட்சியில் இருந்து வந்ததென்றும், அந் நான்கு கழகத்தினரும் ஒன்று சேர்ந்து தம்மை ஆள ஒரு நம்பி யைத் தேர்ந்தெடுத்தனர் என்றும், இவ்வாறு தேர்ந் தெடுக்கப்பட்ட நம்பிகள் கொடுங்கோலராய் மக்களைக் கொடுமை செய்துவந்த காரணத்தால், கழகத்தார் அனைவரும் ஒன்று கூடி வேற்றுப் புலத்தில் மேன்மையுடன் அரசாண்ட அரசரை வரவழைத்துத் தம்முடைய அரசராக ஆக்கிக் கொண்டதாகக் கூறும். இவ்வாறு அரசராகச் சேரநாடு வந்தவர் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு மேல் அரசாளக் கூடாது என்றும், அப்போதுதான் குடிமக்களது நலத்தில், வரும் ஒவ்வோர் அரசர்களும் கருத்துச் செலுத் துவர் என்றும் கருதினார்களாம். இவ்வாறு பன்னிரண் டாண்டிற் கொருமுறை தேர்ந்தெடுக்கப்பட்ட அரசர் களுக்குப் பெருமாள்கள் என்ற சிறப்புப் பெயர் வழங்கியது. அத்தகு பெருமாள்கள் இருபத்தைவர் சேரநாட்டிற் செங்கோலோச்சியதாகவும், அவர்களில் குலசேகரர் என்ற பெயரில் இரண்டு அரசர்கள் காணப்படுகின்றனர் என்றும், அவ் விருவரில் ஒருவரே பெருமாள் திருமொழி பாடிய குலசேகரர் என்றும் கூறுவர். 43. பொன்புரையும் வேற்குலசேகரனே மாசிப் புனர்பூசத் தொழில் வஞ்சிக் களத்திற் றோன்றி' -வேதாந்த தேசிகன் (தேசிகப் பிரபந்தம்) * எண்டிசையும், ஏத்துங் குலசே கரனு ரெனவுரைப்பர் வாய்த்த திருவஞ்சிக் களம்' -பூரீ வரவர முனிகள் (உபதேசரத்தின மாலை)