பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/516

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

518 அரசியல் துறந்த கதை அரசர் அடியவர்களான பரம பாகவதரான அடியார் களை எதிர்கொண்டு அழைத்து உபசரித்து அவர்கட்குத் தொண்டு செய்வதனையே கவனித்து வந்தமையின் அரச கருமங்கள் தடைப்படுவதாக அமைச்சர்கள் கருதினர். எனவே அரசர் அடியவர் பால் கொண்டிருந்த கூட்டுறவை ஒழிக்க முனைந்தனர். அரசர் தமது பூசையறையில் வைத்து வழிபடும் ஆண்டவனுக்கு அணிவிக்கும் அழகிய தொரு பன்மணிமாலையை எடுத்து அமைச்சர்கள் மறைத்து வைத்துவிட்டு, அரசர் அதனைத் தேடிய காலையில், அடியவரல்லாது அயலாலொருவரும் அப் பூசையறையில் நுழைதலின்மையின் அவருள் ஒருவரே அபகரித்துச் சென்றிருக்கவேண்டும் என்று அரசனிடம் தெரிவித்தனர். அடியவர் செயல் o அறச் செயலாகத்தான் அமையுமே யல்லாது இவ்வாறு ஒருநாளும் களவுச் செயலாகப் பொருந்துதல் இல்லை என்பதனை மனமார நம்பிய குலசேகரர் மனம் புழுங்கினார். குடத்திலே கொடிய நஞ்சுடைய பாம்பொன்றையிட்டு அடைக்கச் செய்து அதற்குள் அனைவரெதிலும் தமது கையினைவிட்டு அடியவர் அதனைக் களவாடியிருப்பரேல் குடத்திலிருக்கும் பாம்பு என்னைத் தீண்டுவதாகுக என்று சூளுரைத்த போது பாம்பு அவரைத் தீண்டாது நின்றதால், அடியவர் பெருமையை அமைச்சர்க்கு விளக்கினார். அமைச்சர்கள் இச்செயல் கண்டு அஞ்சி உண்மையை ஒளியாது எடுத் துரைத்துத் தம் பிழையைப் பொறுக்கவேண்டினர். இனி இத்தகு அமைச்சரோடிருந்து அரசாட்சி செய்வது தகுதி யுடைத்தன்று எனக் கருதித் தம் மகனை மன்னராக்கித் தாம் துறவு பூண்டனர் என்பர். பாம்புக் குடத்தில் கைவிட்ட நிகழ்ச்சியினைப் பின்வரும் எம்பெருமானார் பாடல் சித்திரிக்கின்றது: