பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/517

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

519.

  • ஆரங்கெடுப்பர னன்பர்கொள்

ளாரென் றவர்களுக்கே வாரங் கொடுகுடப் பாம்பிற்கை யிட்டவன் மாற்றலரை வீரங் கெடுத்தசெங் கோற்கொல்லி காவலன் வில்லவர்கோன் சேரன் குலசே கரன்முடி வேந்தர் சிகாமணியே.' இப்பாட்டு பூரீ ராமாநுஜ முனிவரர் (உடையவர்) அருளியவை என்றும், மணக் கால் நம்பிகள் அருளியவை என்னும் கூறுவர். குலசேகரர் பற்றிக் குருபரம்பரை கூறுவன கோயில் எனப்படும் திருவரங்கம் சென்று அரங்க நாதனைக் கண்டு வணங்கி அவன் அடியார் கூட்டத்தோடு ஒன்றும் காதலுடையவர் என்பது ஒன்று. இறைவனை வணங்குதலினும் இறைவனுடைய - பெருமாளுடைய அடியார்களாம் பரமபாகவதர்களை வணங்கி வழிபடு, தலையே பெறற்கரும் பேறாகக்கருதினார் என்பது இரண்டு. அடியவர்கள் Ls) or LD IT Jr. மருவற்றவர்களாய், களவு , என்பதனைக் கனவிலும் கருதாதவர்களாய் கடவுள் நெறி நின்று வாழும் அறவோர் என்று அவர் உறுதியாக எண்ணினார் என்பது மூன்று. வடமொழியில் முகுந்தமாலை என்னும் தோத்திரப் பதிகத்தை முதலிலும், நெஞ்சுருக்கும் பெருமாள் திருமொழியைப் பின்னாலும் ஆழ்வார் மால் மீது கொண்ட மாளாத அன்பால் அருளிச் செய்தனர். என்பது நான்கு. இராமாயணத்தை அக்கதை சொல்லு தலில் வல்லார் வாய்க் கேட்டு அதனை நன்கறிந்தவர் 44. திரு. மு. இராகவையங்கார். -சேரவேந்தர் செய்யுட் கோவை, இரண்டாம் பாகம், முதற் பக்கம் அடிக் குறிப்பு. -