பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/518

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

520 என்பது ஐந்து. இராமாயணக் கதையினைப் படிக்கக் கேட்கும்போதே கதை நிகழ்ச்சிகளில் ஒன்றுபட்டு, அக்கதை அப்போதுதான் தம் கண்ணெதிரே நடைபெறுவதாக நினைந்து, அதற்கேற்பச் செயல்படும் உணர்வு மிக்கவர் என்பது ஆறு. உண்ணுவதும் உடுப்பதும் உறங்குவதுமே வாழ்க்கை என்று எண்ணி அதிலேயே ஆழ்ந்து அல்லல் பட்டழியும் உலகவரோடு ஒன்றாக வாழ உள்ளம் ஒருப் படாது, தாம் வழிவழிப் பெற்ற அரசர்க்குரிய பெருஞ் செல்வமெல்லாவற்றையுந் துறந்து, பெருமாள் கோயில் கொண்டிருக்கும் திருக்கோயில்களுக்கெல்லாம் சென்று ஆடிப்பாடி அகமகிழ்ந்து நின்றார் என்பது ஏழு. ஆக இவ் வேழு செய்திகளே குருபரம்பரையில் குலசேகரரைப் பற்றி விளங்க இடம்பெற்றுள்ளன. குலசேகரரோடு நெருங்கிப் பழகியது போன்று குருபரம்பரை அவர் கதையை முதலிலிருந்து முடிவுவரை கூறிச் செல்கின்றது. குருபரம் பரை கூறும் செய்திகள் அனைத்தும் உண்மை வரலாறு என்று நம்மாற் கொள்ள முடியாது போயினும், குரு பரம்பரை கூறும் அனைத்துச் செய்திகளும் கற்பனையேகட்டுக் கதைகளே என்று ஒதுக்கிவிட முடியாது. குருபரம் பரை கூறும் செய்திகளின் அடிப்படையில் சில உண்மைக், கூறுகள் ஒளிவிடக் காணலாம். இதுகாறும் கூறியவற்றால் குலசேகரர் சேர நாட்டை யாண்ட செம்மல் என்பதும், திருமாலின் மீது பித்தேறி அவர் கோயில் கொண்டிருக்கும் பகுதிகளையெல்லாம். காணப் பேராவல் கொண்டிருந்தார் என்பதும், LIDITLD பாகவதர் மாட்டு வணக்கமும் வழிபாடும் செலுத்தப் பெரிதும் விரும்பியவர் என்பதும், இராம காதையில் நெஞ்சைப் பறி கொடுத்தவர் என்பதும், வடமொழியிலும் வல்லுநர் என்பதும், கி.பி. எட்டாம் நூற்றாண்டின் இறுதியில் வாழ்ந்தவர் என்பதும், 105 பாசுரங்கள் கொண்ட பெருமாள் திருமொழியின் ஆசிரியர் என்பதும் அறியப் பட்டன. L