பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/519

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

521 பெருமாள் திருமொழி - பெயர்க் காரணம் பெரிய பெருமாள் விஷயமாகக் குலசேகரப் பெருமாள் இயற்றிய பாசுரங்களாதலின் பெருமாள் திருமொழி என்னும் பெயருடையதாயிற்று. குலசேகரப் பெருமாளி o)/Gö) L-L/ திருமொழி என இத்தொடர் விரியுமாதலால் ஆறாம் வேற்றுமைத் தொகை எனலாம். பெருமாள் திருமொழி உரை எல்லா நூல்களினும் கடவுள் நூலே உயர்ந்ததென்று அறிஞர் உரைப்பர். இவ்வகையில் கடவுள் நூல் எனத் தமிழ் நாட்டிலே கருதப்படுவன திருமுறைகளும், நாலாயிரப் பிரபந்தமும், திருக்குறளுமே என்பர் அறிஞர். சைவத் திருமுறைகளினும் வைணவப் பிரபந்தங்களுக்கு ஒர் ஏற்றம் உண்டு என்பர். சிவனடியார்கள் திருமுறைகளைப் படித்து உணர்ந்து பாடி மகிழ்ந்திருக்கவும் தம்மை நாடி வந்தவர்க்கு உரையகலம் கூறியும் வந்தனர். ஆனால் வைணப் பிரபந்தங்களுக்கு ஆசாரியர் எனப்படும் பெரியோர்கள் மிகச் சிறந்த உரை பல வகுத்தனர். பெரியவாச்சான் பிள்ளை, வடக்குத் திருவீதிப்பிள்ளை முதலானோர் நாலாயிரத்திற்கு நல்லதோர் விரிவுரையினையெழுதி நாட்டிற்கு நல்கியுள்ளனர். உடையவர் எனப்படும் இராமானுஜர் காலத்திலேயே நாலாயிரம் முறையே தொகுக்கப்பட்டுத் திருமாலின் திருமறையாயது என்றும், இராமானுஜருக்கும் சில நூற்றாண்டுகள் முன்னிருந்த நாதமுனிகளது காலத்தில் நாலாயிரம் சிறந்த சீரிய நிலையினை எய்தியிருந்தது என்றும் ஆராய்ச்சியுலகு அறையும். 45. திரு. தெ. பொ. மீனாட்சிசுந்தரம் பிள்ளை; குலசேகரர். ப. 1.