பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/520

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

522 பெருமாள் திருமொழியின் அமைப்பு பெருமாள் திருமொழி நூற்றைந்து (105) பாசுரங் களைக் கொண்டதாகும். உயிர்க் கூட்டங்களை உய்யும் பொருட்டு அருள் பாலிக்கும் திருமகள் கொழுநனான திருமால் இந் நிலவுலகில் திருக்கோயில் கொண்டு எழுந் தருளியிருக்கிற திவ்ய தேசங்கள் நூற்றெட்டனுள் முதலதும் தலைமை பெற்றதுமான திருவரங்கம் பெரிய கோயிலில் எழுந்தருளியிருக்கிற அடியவர்க் கெளியனான அரங்கநாதப் பெருமான் விஷயமாக முதல் மூன்று திருமொழிகளைக் குலசேகரப் பெருமாள் பாடியுள்ளார். திருவேங்கட முடையான் விஷயமாக நான்காவது திருமொழியும், மலைநாட்டுத் திருவித்துவக் கோட்டம்மான் விஷயமாக ஐந்தாவது திருமொழியும் பாடியுள்ளார். இவ் ஐந்து திருமொழிகளும் ஆழ்வார் திருமாலின் அர்ச்சாவதாரங் களில் ஈடுபட்டுப் பாடியனவாகும். அர்ச்சாவதா ரத்திற் போலவே குலசேகரர் எம்பெருமானின் விபவாவ தாரங்களுள்ளும், இராமாவதாரத்திலும், கிருஷ்ணாவதா ரத்திலும் மிக்க ஈடுபாடு கொண்டவர் என்பதனைப் பின் அமைந்துள்ள ஐந்து திருமொழிகளில் விளங்க வைத்துள்ளார். அவற்றுள்ளும் தமக்குச் சிறிது காலமே முந்தியதான கிருஷ்ணாவதாரத்தை நினைத்து, அதில் அப்பெருமானைத் தாம் அனுபவிக்கப் பெறாது போயின மைக்கு இரங்கி, அவ் இரக்கத்தை அக் கிருஷ்ணா வதாரத்திலே திருவாய்பாடி ஆய்ச்சியர்கள் கண்ண பிரானோடு ஊடல் கொண்டு உரைத்த பேச்சுகளால் ஆறாந் திருமொழியையும், தான் பெற்றிருக்கவும் வளர்க்க முடியாமற் போய் ஆயர்பாடி அசோதை கண்ணனுடைய பிள்ளைத் திருவிளையாடல்களைக் கண்டு களித்தாற் போலத் தானுங் கண்டு களிக்க முடியாமற் போன தேவகிப் பிராட்டி, கம்சவதையின் முடிவில் கண்ணனைக் கண்டு கழிவிரக்கத்தோடு பேசின பேச்சுகளால் ஏழாந் திருமொழியையும் இயற்றியுள்ளார். பின்னர் இராமாவ