பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/521

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

523,

  • . . .

தாரத்தில் ஈடுபட்டவராய்க் குலசேகரப் பெருமாள், இராமனைக் கோசலை தன் வயிற்றிற் சுமந்து பெற்ற பேறு காரணமாக அவ் இராமனைத் தொட்டிலிலிட்டுத் தாலாட்டுக் கூறுமுகமாக எட்டாந் திருமொழியையும், தாம் அக்காலத்தில் அனுபவிக்கப் பெறாமல் இழந்ததுமைந்தனான இராமபிரானை குழந்தைமைப் பருவத்தி லெல்லாம் அனுபவித்து, வாலிபப் பருவத்தில் அனுபவிக்கப் பெறாதே இழந்த தசரத சக்கரவர்த்தி, இராமன் தன் ஆணையெனக் கைகேயி கூறிய சொல் தேறிக் காடேகும் போது அப்பிரிவை ஆற்றமாட்டாது புலம்பிய புலம்பல் முகமாக ஒன்பதாந் திருமொழியையும், இராமாயணத்திற். பெரிதும் ஈடுபட்டவரான குலசேகரர் அவ் இராமாயண கதையைப் பின்புள்ளாரும் எளிதாக உணர்ந்து உய்யுமாறு, அயோத்தியில் தசரதன் மகனாய்த் தோன்றியது முதலாகத் தன்னுலகமாம் பரமபதம் புக்கது ஈறாகவுள்ள சரித்திரங் களைச் சுருக்கமாக உணர்த்தவல்ல பத்தாந் திருமொழி யையும் அருளிச் செய்து பெருமாள் திருமொழியைத் தலைக்கட்டியுள்ளார். - பாடல் தொகை முதலாவது, நான்காவது, ஏழாவது, எட்டாவது, ஒன்ப தாவது, பத்தாவது ஆகிய ஆறு திருமொழிகள் தனித் தனியே பதினோரு பாடல்களைப் பெற்றிருக்க, இரண் டாவது, ஐந்தாவது, ஆறாவது ஆகிய மூன்று திருமொழிகள் பப்பத்துப் பாடல்கள் கொண்டிலங்க, மூன்றாந்திருமொழி மட்டும் ஒன்பது பாடல்கள் கொண்டதாக அமைந்துள்ளது. மொத்தத்தில் நூற்றைந்து திருப்பதிகங்கள் பெருமாள் திருமொழியில் அமைந்துள்ளன. இனி, தனித்தனியே ஒவ்வொரு திருமொழியினையும் ஆராய்வோம். ங் -