பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/522

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

524 திருமொழிகளின் பெயர் ஒவ்வொரு திருப்பதிகத்திற்கும் அதன் முதல் தொடரே பெயராக வழங்குகின்றது. பதிற்றுப்பத்துப் பதிகங்கள் பதிகத்தினுள் வரப்பெற்றுள்ள சிறந்த உயிரான தொடரால் பெயர் அமைந்திருக்கப் பெருமாள் திருமொழி, திருமொழி யின் முதற்றொடரால் பெயரமைந்துள்ளது. இராமானுஇ முனிவரர் காலத்தும், அவர் காலத்துக்கு முன்பும் திருப் பதிகத்திற்குத் திருப்பதிகத்தின் முதல் தொடரே பெயராக அமைந்திருந்தது என்பதனைக் கல்வெட்டு கொண்டு அறியலாம். 8 முதல் திருமொழி-இருளிரிய

இருளிரிய எனத் தொடங்கும் முதல் திருமொழியில் ஒவ்வொரு பாடலிலும் முதல் மூன்றடிகளில் திருவரங்கத்தே பள்ளி கொண்டுள்ள திருமாலின் நிலையை நம் கண் ணெதிரே தோன்றுமாறு அழகுற வருணித்துவிட்டு, நான்காம் அடியிலே அத்தகைய பெருமாளை என்று காண்பது", என்று வழிபடுவது என்று இரங்கி ஏங்கு கின்றார். == l

சைவர்கள் வழக்கில் கோயில் என்றால் அது தில்லை (சிதம்பரம்) யையே குறிக்கும். வைணவர்கள் கோயில் 46. முதற்குலோத்துங்க சோழனது பதினைந்தாம் ஆட்சியாண்டில் எழுந்துள்ள கல்வெட்டொன்றில், * தீர்த்தம் பிரஸ்ாதித் தருளின அன்றிரா: திருப்புன்னைக் கீழ் (பூரீரங்கநாதப் பெருமாள்) எழுந்தருளியிருந்து தேட்டருந்திறல் கேட் டருளும்போது ' என்று கூறப்பட்டுள்ளது. (S. I. I. Vo]. iii p. 150.) - திரு. மு. இராகவையங்கார்-சேர வேந்தர் செய்யுட்கோவை. ப. 9.