பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/523

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

525 என்று வணங்கி வ ழி ப டு வ து திருவரங்கமேயாம். *தில்லைக்கு நாளைக்குப் போக வேண்டும்; தில்லைக்கு. நாளைக்குப் போக வேண்டும்' என்று பித்தேறி நனவிலும் கனவிலும் தில்லைத் திருக்கோயில் உறையும் நடராசப் பெருமானைத் திருநாளைப் போவார் (நந்தனார்) எண்ணி ஏங்கியது போன்று, ஆழ்வார்களிலே பெரிய கோவில் பெரும்பித்துப் பிடித்து என்று கொலோ காண்பது என்று அழுது அரற்றி அரங்கநாதனை எண்ணியவர் குலசேகரர் ஆவர். முதல் திருமொழியில் இடம் பெற்றுள்ள பதிகங்கள் அனைத்தும், கங்கையிற் புனிதமாய காவிரியின் நடுவே திருவரங்கம் பெரிய கோயிலுட் பள்ளி கொண்டருளும் அரங்கநாதப் பெருமானைக் கண்ணாரக் கண்டும், வாயார வாழ்த்தியும், அங்குள்ள திருமுற்றத்து அடியாரை அணுகி யும், மலர் துரவி வழிபட்டும், தலையார வணங்கியும், கண் களில் நீர் சுரக்க உள்ள முருகியும், அப்பெருமான் தன் தொண்டரோடு ஆடிப்பாடி அரங்கவோ என்றழைத்துத் துள்ளி மகிழும் நன்னாள் தனக்கு என்று வாய்க்குமோ என்று குலசேகரர் திருவுள்ளம் விரைகின்ற பான்மையினைக் கூறுவனவாய் அமைந்துள்ளன. முதல் திருமொழியின் உள்ளுறை பொருள் (1) திருவரங்கம் பெரிய கோயிலில் காவிரியாற்றின் நடுவே ஆயிரந் தலைகளையுடைய ஆதிசேடன் மீது திருக்கண் வளரா நின்ற அழகிய மணவாளனை அடியேன் கண்ணாரக் கண்டு களிக்கும் பேறு என்றைக்கு. வாய்க்குமோ' என்று நெஞ்சம் நெக்குருகுகிறார் ஆழ்வார். (2) ஆயிரம் வாய்களாலும் ஆயிரம் திருப்பெயர் களைச் சொல்லி எம்பெருமானைத் துதிப்பவனும், பால் போலும் வெளுத்த உடலையுடையவனுமான ஆதிசேடன், அரங்கநாதர்பால் கொண்ட அதிகப் பற்றுக் காரணமாக,