பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/524

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

326 யாரேனும் கொடிய அரக்க அசுரர்கள் வந்து எம் பெருமானுக்கு இன்னலை விளைவிக்கப் போகிறார்களோ வென்று, எப்போதும் அழலை வாயினின்றும் உமிழ்ந்து கொண்டுள்ளான். செந்நிறமான அவனுடைய வாய்த் தி அவனுடைய தலைகளின் மேற் கிளம்பி எங்கும் பரவி, -:சண்பகம் முதலான செம்மலர்களாலே ஒரு மேல் விதானம் அமைக்கப்பட்டுளதோ என்று தோன்றுமாறு விளங்க, அத்தகைய பெரிய பெருமாளை அரவணையின் கீழ்ப் பள்ளி கொண்டருளிய தோற்றத்தில் வணங்கா நின்ற அளவில் மயக்கம் மீதுாறிக் கால்களும் கண்களும் சுழல நெஞ்சம் தடுமாற, அதுபோது அரங்கத்தம்மான் திருக்கோயிலில் நிற்கும் மணத்துரண்கள் இரண்டையும் பற்றிக் கொண்டு நின்று, வாய்த்தினவு தீரத் துதிக்கும் பேறு என்றைக்கு வாய்க்குமோ என்று ஆழ்வார் ஆவல் மீதுாரப் பேசு கின்றார். (3) எல்லா வகையினும் மாட்சிமை பொருந்திய நான்முகன் தன்னுடைய நான்கு நாக்கினாலும் சொற் களைக் கூறித் துதித்து, நான்முகங்களாலும் இனிமையாக மறைகளால் துதி செய்து, அழகிய எட்டுக் கண்களினால் எல்லாப் பக்கங்களிலும் நன்றாகக் கண்டு களிக்கவும் அமைந்த செவ்விய பொன்போல் விரும்பத்தக்க வடிவுடைய தன்னுடைய தாமரைப் பூவையுடைய திருநாபிக் கமலம் விளங்கும்படி திருவரங்கத்துப் பாம்பணையிற் பள்ளி கொள்ளும் பெரிய பெருமாளுடைய திருவடியின் கீழே பூக்களையிட்டு வணங்கி அங்குள்ள அடியார்களோடு நெருங்கி வாழ்வது என்றைக்கோ' என்கிறார் ஆழ்வார். (4) குதிரையின் வடிவங்கொண்டு தன்னைக் கொல்ல வந்த கேசி என்னும் அசுரனைக் கொன்ற கடல் போன்ற வடிவையுடையனாகிய கண்ணனை-அன்று-இந்திரன் கல் மழை பொழிந்த காலத்தில் கோவர்த்தன மலையைக் குடையாகத் தூக்கிப் பசுக்களையும் ஆயர்களையும்